Nigazhvu News
23 Nov 2024 3:38 AM IST

Breaking News

கடல்மட்டத்தில் இருந்து உலகின் உயரமான இடத்தில் சாலை அமைத்து இந்தியா உலக சாதனை : நிதின் கட்காரி வாழ்த்து.

Copied!
Nigazhvu News

கடல்மட்டத்தில் இருந்து உலகின் உயரமான இடத்தில் சாலை அமைத்து இந்தியா உலக சாதனை : நிதின் கட்காரி வாழ்த்து.

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக் பகுதியில் 52 கிமீ தூரத்திற்கு சாலை அமைத்து உலக சாதனை புரிந்த இந்திய இராணுவத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாலை கடந்த ஆகஸ்ட் மாதம் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய இராணுவத்தின் சாதனைகள் எண்ணிலடங்காதவை‌. அவர்களின் வீரமும் தீரமும் இந்தியாவின் பெருமைக்கு மகுடம் சேர்ப்பதாக இருந்து வரும் நிலையில், தற்போது புதிய கின்னஸ் சாதனை ஒன்றை செய்து இந்தியாவை பெருமையடையச் செய்துள்ளனர்.

இந்திய இராணுவத்தின் ஒரு பிரிவான எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) உலகிலேயே மிக உயரமான இடத்தில் மோட்டார் சாலையை நிறுவி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

அவர்கள் கடல் மட்டத்தில் இருந்து 19,300 அடி உயரத்தில் இருக்கும் லடாக்கில் மோட்டார் சாலைகளை அமைத்துள்ளனர்.‌ இதன் மூலம் 18953 அடி உயரத்தில் பொலிவியா நாட்டில் உடுருஞ்சு எரிமைலையை இணைக்க அமைக்கப்பட்ட சாலையின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. 

இந்த சாலையானது கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதனால் குளிர் காலங்களில் -40 டிகிரி செல்ஸியஸ் அளவில் கடுங்குளிர் வீசும் இப்பகுதியில் ஆக்சிஜன் அளவும் 50% அளிவிற்கே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

BRO வீரர்கள் உருவாக்கிய இந்த சாலையானது கிழக்கு லடாக்கின் மற்ற பகுதிகளை உம்லிங் லா பாஸ் (Umlingla Pass) வழியாக இணைக்கிறது. சுமார் 52 கிமீ நீளம் கொண்ட இந்த சவாலான பணியை, கடந்த ஆகஸ்ட் மாதம் அமைத்து முடித்தனர். கிழக்கு லடாக்கில் உள்ள ச்சுமார் செக்டாரை இணைக்கும் இந்த சாலை சிசும்லே மற்றும் தேம்சுக் பகுதிகளுக்கு செல்லவும் உதவும் என்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கின்னஸ் உலக சாதனைப் புரிந்த எல்லைப்புறச் சாலைகள் அமைப்பை வாழ்த்தி பதிவிட்டுள்ள ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி " உம்லிங் லாபாஸ் இல் 19024 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான மோட்டார் தார் சாலையை நிர்மாணித்து கின்னஸ் சாதனை படைத்த எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு(BROindia) வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். " என்று பதிவிட்டுள்ளார். 


மேலும் " BROindia தேச சேவையில் இது போன்ற மேலும் பல சாதனைகளை படைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்

இச்சாலை லடாக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்குமென்பதால், அப்பகுதிக்கு இன்னும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்கள்

Copied!