கொரோனாவால் நிறுத்தப்பட்ட வெளிநாடு பயணிகள் விமான சேவை மீண்டும் டிசம்பர் 15லிருந்து தொடக்கம் - விமான போக்குவரத்துறை அறிவிப்பு
கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டிருந்த பயணிகளுக்கான வெளிநாட்டு விமான சேவையை டிசம்பர் 15லிருந்து மீண்டும் தொடங்குவதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது
சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா பரவலால் உலகமே ஸ்தம்பித்த நிலையில், வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் விமான சேவையை சில மாதங்களுக்கு நிறுத்திய இந்தியா, பிறகு ஏர் பப்புள் எனும் கட்டுப்பாட்டுக்குள் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை தொடங்கியது.
இதன்படி இன்றுவரை அந்த நடைமுறை பின்பற்றப்பட்டு, விமானசேவை தொடர்ந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் மீண்டும் விமான சேவையை தொடங்க இந்திய திட்டமிட்டுள்ளது.
வரும் டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து பயணிகளுக்கான வெளிநாட்டு விமான சேவை மீண்டும் தொடங்குவதாக மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது. வெளிநாடுகளை 3 வகையாக பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் விமான சேவை மீண்டும் டிசம்பர் 15லிருந்து தொடக்கம் - விமான போக்குவரத்துறை அறிவிப்பு
கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டிருந்த பயணிகளுக்கான வெளிநாட்டு விமான சேவையை டிசம்பர் 15லிருந்து மீண்டும் தொடங்குவதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது
சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா பரவலால் உலகமே ஸ்தம்பித்த நிலையில், வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் விமான சேவையை சில மாதங்களுக்கு நிறுத்திய இந்தியா, பிறகு ஏர் பப்புள் எனும் கட்டுப்பாட்டுக்குள் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை தொடங்கியது.
இதன்படி இன்றுவரை அந்த நடைமுறை பின்பற்றப்பட்டு, விமானசேவை தொடர்ந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் மீண்டும் விமான சேவையை தொடங்க இந்திய திட்டமிட்டுள்ளது.
வரும் டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து பயணிகளுக்கான வெளிநாட்டு விமான சேவை மீண்டும் தொடங்குவதாக மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது. வெளிநாடுகளை 3 வகையாக பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உங்கள் கருத்தை பதிவிடுக