Nigazhvu News
23 Nov 2024 4:10 AM IST

Breaking News

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் நடக்குமா : சிக்கலில் இந்திய அணி - அனுராக் தாகூர் அதிரடி

Copied!
Nigazhvu News

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் நடக்குமா : சிக்கலில் இந்திய அணி - அனுராக் தாகூர் அதிரடி 

அடுத்த மாதத்தில் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செல்லவிருந்த இந்திய அணிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி,  அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.  இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வரும் வேளையில், அந்த தொடருக்கு புதிதாக சிக்கலொன்று முளைத்துள்ளது. 

கடந்த சில நாட்களாக, உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் என்னும் கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 60க்கும் மேற்பட்டோரைத் தாக்கி உள்ள இந்த நவீன வைரஸ், ஹாங்காங்,போட்ஸ்வானா மற்றும் இஸ்ரேல் பகுதிகளிலும்  வேகமாக பரவி வருகிறது. 

தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகளின் செயல்திறனை எதிர்க்கும் வகையில் இந்த வைரஸ் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளதால்,   இதற்கு எதாராக, உலக சுகாதார அமைப்பு ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸை மிகவும் ஆபத்தான வைரஸாக  வரிசைப்படுத்தி உள்ளது.‌

இந்த புதிய கொரோனா பரவாலால், இந்திய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இது பற்றி பதிலளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் " இப்போதைய நிலையில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் குறித்து எதுவும் கூற முடியாது " என்று பதிலளித்துள்ளார். 

மேலும் பேசிய அனுராக் தாகூர் "  மத்திய அரசுடன் கலந்து பேசி அனுமதி பெற்ற பின்னரே, இந்திய அணியை தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பும் முடியும். இந்த சூழ்நிலையில், பிசிசிஐ தென்னாப்பிரிக்காவிற்கு வீரர்களை அனுப்புவது அறிவார்ந்த செயலாக இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா பயணத்திற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், வீரர்களின் பாதுகாப்பிற்கு அச்சம் தரும் இந்த உருமாற்றம் அடைந்த நவீன கொரோனா வைரஸ் பெரும் சிக்கலை உண்டாக்கி உள்ளது.



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்பு - குன்னூர் விரைகிறார் மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் நிறுத்தப்பட்ட வெளிநாடு பயணிகள் விமான சேவை மீண்டும் டிசம்பர் 15லிருந்து தொடக்கம் - விமான போக்குவரத்துறை அறிவிப்பு‌

Copied!