அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் கமலா ஹாரிஸ் : ஜோ பைடனின் மருத்துவ பரிசோதனையால் 85 நிமிடங்கள் அதிபர் பதவி
அமெரிக்க வரலாற்றின் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைத்துள்ளார் துணை அதிபர் கமலா ஹாரிஸ். ஜோ பைடன் உடல்நலப் பரிசோதனைக்கு சென்றதால் 85 நிமிடங்கள் , கமலா ஹாரிஸ் அதிபராகப் பதவி வகித்தார்
அமெரிக்க அதிபரான ஜோபைடன் வழக்கமான உடல்நலம் சார்ந்த மருத்துவ பரிசோதனைக்காக,வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜோ பைடனுக்கு கொலோனோஸ்கோபி பரிசோதனைக்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக தனது அதிகாரங்களை துணை அதிபரான கமலா ஹாரிஸிடம் வழங்கினார்.
இதனால் அமெரிக்க நேரப்படி இன்று காலை 10.10 மணி முதல் 11.35 மணி வரை அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார். சிகிச்சைக்குப் பிறகு ஜோ பைடன் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். இந்த 85 நிமிடங்கள் அதிபர் அதிகாரங்களைப் பெற்றிருந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் தற்காலிக அதிபர் பதவியை ஏற்றுகொண்ட முதல் பெண் என்ற சாதனை படைத்தார்.
அதிபர் ஜோ பைடன் ஆரோக்கியமாக இருப்பதாக அதிபரின் மருத்துவர் குழு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
உங்கள் கருத்தை பதிவிடுக