Nigazhvu News
28 Sep 2024 10:12 PM IST

Breaking News

ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணம் 25 சதவீதம் உயர்வு : நவம்பர் 26 முதல் அமல்

Copied!
Nigazhvu News

ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணம் 25 சதவீதம் உயர்வு : நவம்பர் 26 முதல் அமல் 

இந்தியாவின் முன்னணி மொபைல் சேவை நிறுவனத்தின் ஒன்றான  பார்தி ஏர்டெல், தனது ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணங்களை 25% உயர்த்தியுள்ளது. இந்த புதிபுதிய கட்டண விகிதங்கள் நவம்பர் 26 முதல் அமலுக்கு வரும் என பார்தி ஏர்டெல் அறிவித்துள்ளது

கடந்த ஜூலையில் ஏர்டெல் போஸ்டுபெய்டு திட்டங்களுக்கான கட்டணங்களை உயர்த்திய நிலையில், ப்ரீபெய்டு கட்டணங்களையும் தற்போது உயர்த்தி உள்ளது.

ஏர்டெல்லில் 28 நாட்களுக்கு ரூ79 என இருக்கும் தற்போதயை ப்ளானை  25% உயர்ந்தி ரூ99  என அறிவித்துள்ளது. ரூ49 ப்ளானை முற்றிலுமாக நீக்கியுள்ள ஏர்டெல், எஸ்.எம்.எஸ் சேவையைப் பெற குறைந்தபட்ச தொகையாக ரூ179க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என மாற்றியுள்ளது. இது முன்னர் ரூ 149 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் சேவையை ரூ  ரூ.219 திட்டம் தற்போது ரூ.265 ஆக உயர்ந்தியுள்ளது. 

அதிக பயனர்கள் பயன்படுத்தும் 84 நாட்களுக்கான ரூ 598ப்ளானையும் உயர்த்தி ரூ719 என அறிவித்துள்ளது ஏர்டெல் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த ப்ரீபெய்டு உயர்வு நவம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்களும் விரைவில் கட்டண உயர்வை அறிவிக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.‌



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3 விக்ரம் லேண்டர்!

Copied!