ஜீ தொலைக்காட்சியின் சர்வைவர் பட்டத்தை தட்டித்தூக்கிய விஜயலெட்சுமி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சர்வைவர் ரியாலிட்டி ஷோவின் முதலாவது டைட்டிலை வென்றுள்ளார் விஜயலெட்சுமி
தொலைக்காட்சிகளில் சீரியல், சினிமா என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும், ரியாலிட்டி ஷோவிற்கு கிடைக்கும் வரவேற்பு அலாதியானது. சூப்பர் சிங்கர், கலக்கப் போவது யாரு என அடுத்தடுத்து ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி முன்னிலை வகித்த விஜய்டிவி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடம் வகிக்கிறது.
இதற்குப் போட்டியாக, டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கியது. பேரி கிரில்ஸ் அளவிற்கு இல்லாவிட்டாலும், இந்நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க, போட்டியாளர்கள் களமிறங்கினார்கள்.
இந்திரஜா, நந்தா, லக்கிநாராயணன், ஐஸ்வர்யா, லக்ஷ்மி பிரியா, சந்திரமௌலி, விக்ராந்த், விஜயலக்ஷ்மி, ராம்,உமாபதி ராமையா, லேடி காஷ், பெசன்ட் நகர் ரவி, அம்ஜத்கான், சரண் சக்தி, காயத்ரி ரெட்டி, VJ பார்வதி, ஸ்ருஷ்டி டாங்கே என திரை நட்சத்திரங்களை களமிறக்கிய ஜீ டிவி, ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
ஆரம்பத்தில் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரு பிரிவாக களத்தில் இறங்கிய போட்டியாளர்களுக்கு, பல போட்டிகள் நடைபெற்றன. அதன் அடிப்படையில் பரிசுகளும், எலிமினினேசனும் தொடர்ந்து வழங்கப்பட்டது. அந்த அணியோடு இனிகோ பிரபாகரன் மற்றும் பிரபல மாடல் வனேசா க்ரூஸ் என மேலும் சில பிரபலங்களை இறக்கி விறுவிறுப்பை அதிகரிக்க வைத்த நிர்வாகம், தொடர்ந்த கடுமையான டாஸ்க்குகளை வைத்து பார்வையாளர்களுக்கு விருந்தளித்தது.
அர்ஜூன் தொகுத்து வழங்கியதோடு, பாரானபட்சமின்றி இரு அணிகளையும் வழிநடத்தினார். பல வாரங்களைக் கடந்த இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குள் விஜயலக்ஷ்மி, உமாபதி ராமையா,சரண் சக்தி, வனேசா க்ரூஸ் மற்றும் லக்கி நாராயணன் ஆகியோர் நுழைந்தனர்.
தொடர்ந்து நடந்து வந்த சர்வைவர் தொடர், முதல் சீசனை நிறைவு செய்துள்ளது. பல்வேறு கட்டங்களாக நடந்த போட்டியின் அடிப்படைடையில், நடிகை விஜயலெக்ஷ்மி முதலாவது சர்வைவர் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு 1 கோடூ ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. நடிகர் சரண் சக்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவிடுக