உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு குறுக்குச்சாலை அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, பள்ளியின் பசுமைபடை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலைமாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரி தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு ஓவிய ஆசிரியர் கற்பகலெட்சுமி, ஜேஆர்சி பொறுப்பு ஆசிரியர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் தாமோதரன் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது பள்ளியின் நுலைவு வாயிலில் தொடங்கி குறுக்குச்சாலை பிரதான சாலை வழியாக கட்டபொம்மன் ஆர்ச் வரை சென்று மீண்டும் அதே வழியில் பள்ளியை செண்றடைந்தது. பேரணியில் ஆசிரியர்கள் சித்ரா, செல்விமேரி, துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலெட்சுமி மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக