Nigazhvu News
23 Nov 2024 3:53 AM IST

Breaking News

சென்னை, தூத்துக்குடி கடலில் மூழ்கும் : ஐ.நா ஆய்வுக்குழு எச்சரிக்கை

Copied!
Nigazhvu News

சென்னை, தூத்துக்குடி கடலில் மூழ்கும் : ஐ.நா ஆய்வுக்குழு எச்சரிக்கை 

 சென்னை, துாத்துக்குடி, மும்பை, கொச்சின், விசாகபட்டினம் உட்பட 12 இந்திய நகரங்கள், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடலில் மூழ்கும் அபாயம்  உருவாகியுள்ளதாக ஐ.நா., ஆய்வுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்  நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 195 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு,  பருவநிலை மாறுபாடுகள் குறித்த  ஐ.பி.சி.சி., அறிக்கையை 5 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடுவர். 

ஐபிசிசி என்றழைக்கப்படும் இந்த அறிக்கை புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, உயரும் வெப்பநிலை, பனிப்பாறைகள் உருகுவது என பல்வேறு காரணிகளை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும். 

அந்த நிபுணர் குழு வெளியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "புவி வெப்பமடைதல் அதிகரிப்பது மிக வேகமாக  நடைபெறுவதால், 2030ம் ஆண்டுக்குள் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்' " என‌ எச்சரித்துள்ளது.

இதனை ஆய்வு செய்துள்ள நாசா, இந்தியா குறித்து வெளியிட்டுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 

இந்தியாவில் பருவநிலை மாற்றங்கள் முரணாக மாறி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பால், கடல் நீர்மட்டம்  வேகமாக உயர்ந்து வருகிறது.‌ இதன் காரணமாக இந்தியாவின் முக்கிய 12 நகரங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


இதனைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னை, துாத்துக்குடி, மும்பை உட்பட 12 நகரங்கள் இந்த நுாற்றாண்டின் இறுதிக்குள் கடலில் மூழ்கிவிடும் என நாசா எச்சரித்துள்ளது.

நாசா குறிப்பிட்டுள்ள அந்த 12 இந்திய நகரங்கள்  

நகரம் - அடி

கண்ட்லா - 1.87

ஓகா - 1.96

பாவ்நகர் - 2.70

மும்பை - 1.90

மர்மகோவா - 2.06

மங்களூரு - 1.87

கொச்சின் - 2.32

பாராதீப் - 1.93

கிதிர்புர் - 0.49

விசாகப்பட்டினம் - 1.77

சென்னை - 1.87

துாத்துக்குடி - 1.90

இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. 



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

குறக்குச்சாலை அரசுப்பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Copied!