
மேஷம்
எந்த விஷயத்திலும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்புக் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
பரிகாரம்:
ராமர் மற்றும் அனுமன் வழிபாடு நல்ல பலன் தரும்.
ரிஷபம்:
இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
பரிகாரம்:
வெள்ளி நகைகளை அணிவது சகல நன்மைகளையும் கொடுக்கும்.
மிதுனம் :
இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
பரிகாரம்:
புதன் பகவானுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
கடகம்:
இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். சிலர் நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பரிகாரம்:
புதன் பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்யவும்.
சிம்மம்:
"எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.",
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
கன்னி:
"மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணி களிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் - மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.",
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகன் கோவில் வழிபாடு மிகவும் நன்மை தரும்.
துலாம்
உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் நாள். உங்கள் செயல்பாடுகளில் கண்ணும் கருத்து மாக, பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மற்றவர்களின் பாராட்டு கிடைக்கும். புதுத்தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உழைப்பால் உயர்வு பெறும் நாள்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
விருச்சிகம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர் பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு உண்டாகும். ஆனால், பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
பரிகாரம்:
ஹனுமான் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யலாம்.
தனுசு :
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர் பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு உண்டாகும். ஆனால், பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
பரிகாரம்:
தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
மகரம்:
"இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை முன்னேற்றததைத் தரும் உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும்.",
பரிகாரம்:
வயதானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
கும்பம்:
இன்று பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். அரசியல் துறையினர் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
பரிகாரம்:
பிள்ளையார் வழிபாடு, கருப்பு நெல் தானம் சிறப்பு.
மீனம்:
"இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம்."
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
உங்கள் கருத்தை பதிவிடுக