Nigazhvu News
17 Mar 2026 3:12 AM IST

இன்றைய ராசிபலன் - 11.05.2025

Copied!
Nigazhvu News

மேஷம்:

"புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.",

பரிகாரம்:

எள், கருப்பு உளுந்து தானம் செய்வது நல்லது.


ரிஷபம்

  இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும் புது பதவி, சொத்து வழக்கில் வெற்றி கிடைக்கும்.


பரிகாரம்: 

வேத பாடம் கேட்பது நல்லது.


மிதுனம்

        "தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.",


பரிகாரம்:

வெள்ளிக்கிழமை கோதை நாச்சியாருக்கு மஞ்சள் கலந்த பால் அபிஷேகம் செய்யலாம்.


கடகம்

  பண வரவு திருப்திகரமாக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்கள் மற்றும் அதிகார பதவிகளில் இருப்பவர்களின்  நட்பு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.


பரிகாரம்:

துளசி மலரால் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்யலாம்.


சிம்மம்

 இன்று தெய்வீக ஈடுபாடு இருக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.


பரிகாரம்:

வெள்ளிக்கிழமை மஹாலட்சுமி வழிபாடு செய்யவும்.


கன்னி

        "மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதியும் மனதில் சோர்வும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும்.",


பரிகாரம்:

குரு பகவானை வழிபடவும்.


துலாம்:
    திட்டவட்டமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும்.பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை கொடுப்பார்கள். வெற்றி கிட்டும் நாள்.

பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்ற வழிபடலாம்.

விருச்சிகம்:
   ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். மனதில் குழப்பமும், பதட்டமும் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் லாபம் பெற போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை கற்றுக்கொள் வீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எனினும் பிற்பகலுக்கு மேல் பல நன்மைகள் உண்டு.

பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

தனுசு:
        "மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும்.",

பரிகாரம்:
தனுசு ராசிக்காரர்கள் வேத பாடம் கேட்பது நல்லது.

மகரம்:
        "இன்று சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்வீர்கள். அதேநேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினர் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.",

பரிகாரம்:
எள், கருப்பு உளுந்து தானம் செய்வது நல்லது.

கும்பம்:
 இன்று பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். அரசியல் துறையினர் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

பரிகாரம்:
பிள்ளையார் வழிபாடு, கருப்பு நெல் தானம் சிறப்பு.

மீனம்:
        "இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம்."

பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இன்றைய ராசிபலன் - 12.05.2025

இன்றைய ராசிபலன் - 10.05.2025

Copied!