Nigazhvu News
20 Apr 2025 9:45 AM IST

இன்றைய ராசிபலன் - 20.03.2025

Copied!
Nigazhvu News

மேஷம்:

"இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசால் ஆதாயம் உண்டாகும் சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் கூட உண்டாகலாம்.",

பரிகாரம்:

செவ்வாய் கோளின் அனுக்கிரஹம் பெற செவ்வாய் வழிபாடு செய்யவும்.


ரிஷபம்:

"தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத் தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்ய வேண்டி வரும்.",

பரிகாரம்:

வெள்ளிக்கிழமை மஹாலட்சுமி வழிபாடு செய்யவும்.


மிதுனம்:

இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

பரிகாரம்:

புதன் பகவானுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.


கடகம்:

இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். சிலர் நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பரிகாரம்:

புதன் பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்யவும்.


சிம்மம்:

 இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னரே செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்:

காளி தேவியை வழிபடவும்.


கன்னி:

 இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும்.",

பரிகாரம்:

குரு பகவானை வழிபடவும்.


துலாம்:

"தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.",

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடவும்.


விருச்சிகம்:

 இன்று தெய்வீக ஈடுபாடு இருக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

பரிகாரம்:

ஹனுமான் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யலாம்.


தனுசு:

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர் பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு உண்டாகும். ஆனால், பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

பரிகாரம்:

தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.


மகரம்:

"இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை முன்னேற்றததைத் தரும் உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும்.",

பரிகாரம்:

வயதானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.


கும்பம்:

 இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சனையை கண்டு பயப்படாமல் கையாள்வீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் பாரட்டைப் பெறுவீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகும்.

பரிகாரம்:

துளசி மலரால் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்யலாம்.


மீனம்:

புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம்.. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்ப தால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

பரிகாரம்:

தர்ம காரியம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இன்றைய ராசிபலன் - 21.03.2025

Copied!