
மேஷம்:
"இன்று சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்வீர்கள். அதேநேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினர் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு,
நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.",
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை
சந்திரனுக்கு நிவேதனம் செய்து விளக்கு ஏற்றுவது நன்மை.
ரிஷபம்:
இன்று பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும்,
தொழில் வியாபாரம் சீராக நடக்கும். அரசியல் துறையினர் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை
கோதை நாச்சியாருக்கு
மஞ்சள் கலந்த பால் அபிஷேகம் செய்யலாம்.
மிதுனம்:
"இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு,
கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம்.",
பரிகாரம்:
புதன்கிழமை சிவன் கோவில்
வழிபாடு சிறப்பானது.
கடகம்:
"இன்று எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.",
பரிகாரம்:
திங்கட்கிழமைகளில் சந்திரன் கோவிலில் (திங்களூர்) வழிபாடு செய்யலாம்.
சிம்மம்:
"இன்று எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.",
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
கன்னி:
"இன்று மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணி களிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் - மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.",
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகன்
கோவில்
வழிபாடு மிகவும் நன்மை தரும்.
துலாம்:
இன்று திட்டவட்டமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும்.பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை கொடுப்பார்கள். வெற்றி கிட்டும் நாள்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில்
மகாலட்சுமிக்கு தீபம் ஏற்ற
வழிபடலாம்.
விருச்சிகம்:
இன்று ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். மனதில் குழப்பமும், பதட்டமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பெற போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை கற்றுக்கொள் வீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எனினும் பிற்பகலுக்கு மேல் பல நன்மைகள் உண்டு.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில்
தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
தனுசு:
" இன்று மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும்.",
பரிகாரம்:
தனுசு ராசிக்காரர்கள் வேத பாடம்
கேட்பது நல்லது.
மகரம்:
"இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும்.",
பரிகாரம்:
எள், கருப்பு
உளுந்து தானம் செய்வது நல்லது.
கும்பம்:
இன்று பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும்,
தொழில் வியாபாரம் சீராக நடக்கும். அரசியல் துறையினர் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
பரிகாரம்:
பிள்ளையார் வழிபாடு,
கருப்பு நெல் தானம் சிறப்பு.
மீனம்:
"இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு,
கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம்."
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில்
தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
உங்கள் கருத்தை பதிவிடுக