
மேஷம்:
"தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும்,
உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை,
ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்ய வேண்டி வரும்.",
பரிகாரம்: வெள்ளிக்கிழமை மஹாலட்சுமி வழிபாடு செய்யவும்.
ரிஷபம்:
இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னரே செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் இருப்பது நல்லது.
பரிகாரம்: காளி தேவியை வழிபடவும்.
மிதுனம்:
இன்று தெய்வீக ஈடுபாடு இருக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன்,
மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.
பரிகாரம்: ஹனுமான் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யலாம்.
கடகம்:
இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சனையை கண்டு பயப்படாமல் கையாள்வீர்கள். கோபமான பேச்சு,
டென்ஷன் குறையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் பாரட்டைப் பெறுவீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகும்.
பரிகாரம்: துளசி மலரால் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்யலாம்.
சிம்மம்:
இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். வேலையில் இழுபறி,
வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு,
மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
பரிகாரம்: வெள்ளி நகைகளை அணிவது சகல நன்மைகளையும் கொடுக்கும்.
கன்னி:
இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்.
துலாம்:
"இன்று குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும்,
பாதிப்பு இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்டநாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மொத்தத்தில் சோதனைகளை கடந்தே இன்றைய தினத்தில் நீங்கள் சாதனை படைப்பீர்கள்.",
பரிகாரம்: சிவன் கோவிலில் பூஜை செய்து, ருத்திராபிஷேகம் செய்யவும்.
விருச்சிகம்:
"பல வகைகளிலும் அனுகூலமான நாள். முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் ஆலோசனை செய்வது நல்லது. கணவன் -
மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.",
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி, துளசிப் பூஜை செய்யவும்.
தனுசு:
இன்று பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும்,
தொழில் வியாபாரம் சீராக நடக்கும். அரசியல் துறையினர் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை கோதை நாச்சியாருக்கு மஞ்சள் கலந்த பால் அபிஷேகம் செய்யலாம்.
மகரம்:
"எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால்,
பொறுமை அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.",
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
கும்பம்:
ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். மனதில் குழப்பமும், பதட்டமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பெற போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை கற்றுக்கொள் வீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எனினும் பிற்பகலுக்கு மேல் பல நன்மைகள் உண்டு.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
மீனம்:
"இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசால் ஆதாயம் உண்டாகும் சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் கூட உண்டாகலாம்.",
பரிகாரம்: செவ்வாய் கோளின் அனுக்கிரஹம் பெற செவ்வாய் வழிபாடு செய்யவும்.
உங்கள் கருத்தை பதிவிடுக