
மேஷம்
"இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை முன்னேற்றததைத் தரும் உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும்.",
பரிகாரம்:
புதன் பகவானுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
ரிஷபம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர் பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு உண்டாகும். ஆனால்,
பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
பரிகாரம்:
ஹனுமான் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யலாம்.
மிதுனம்
பண வரவு திருப்திகரமாக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்கள் மற்றும் அதிகார பதவிகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
பரிகாரம்:
துளசி மலரால் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்யலாம்.
கடகம்
"புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால்,
பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.",
பரிகாரம்:
எள், கருப்பு
உளுந்து தானம் செய்வது நல்லது.
சிம்மம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும்.பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை கொடுப்பார்கள். வெற்றி கிட்டும் நாள்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில்
மகாலட்சுமிக்கு தீபம் ஏற்ற
வழிபடலாம்.
கன்னி
"எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் -
மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.",
பரிகாரம்:
திங்கட்கிழமைகளில் சந்திரன் கோவிலில் (திங்களூர்) வழிபாடு செய்யலாம்.
துலாம்
"இன்று சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்வீர்கள். அதேநேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினர் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு,
நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.",
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை
சந்திரனுக்கு நிவேதனம் செய்து விளக்கு ஏற்றுவது நன்மை.
விருச்சிகம்
"பல வகைகளிலும் அனுகூலமான நாள். முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் ஆலோசனை செய்வது நல்லது. கணவன் -
மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.",
பரிகாரம்:
ஆஞ்சநேயரை வணங்கி,
துளசிப் பூஜை செய்யவும்.
தனுசு
இன்று நீண்டதூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்ல பலன் தரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் கணவன்,
மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத் துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது.
பரிகாரம்:
பசுவுக்கு உணவு அளிப்பது நன்மை தரும்.
கும்பம்
"இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து சிலருக்கு கவலை உண்டாகலாம்.",
பரிகாரம்:
புதன் பகவானுக்கு கற்பூர ஆராதனை செய்யவும்.
மீனம்
"இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை முன்னேற்றததைத் தரும் உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும்.",
பரிகாரம்:
வயதானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
உங்கள் கருத்தை பதிவிடுக