Nigazhvu News
07 Apr 2025 11:17 PM IST

இன்றைய ராசிபலன் – 07-04-2025

Copied!
Nigazhvu News

மேஷம்

 

"எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத் தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.",


பரிகாரம் – வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி, குரு பகவான் வழிபாடு செய்யவும்.

 

ரிஷபம்

 

"இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும் புது பதவி, சொத்து வழக்கில் வெற்றி கிடைக்கும்.",


பரிகாரம் – சனிக்கிழமை ஹனுமான், சனி பகவான் வழிபாடு செய்யவும்.

 

மிதுனம்

 

"கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர் அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள் வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சாதனை படைக்கும் நாள்.",


பரிகாரம் – சனிக்கிழமை சனி பகவான் மற்றும் ஆனந்தானந்த சாய்பாபா வழிபாடு செய்யவும்.

 

கடகம்

 

"தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.",


பரிகாரம் – வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.

 

சிம்மம்

 

"மாறுபட்ட சிந்தனையாலும், புதிய யுக்திகளாலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் உங்களின் சிறப்பான செயல்பாடுகளால் வளர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான நிலை இருக்கும். சாதிக்கும் நாள்.",


பரிகாரம் – செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு செய்யவும்.

 

கன்னி

 

"இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களை விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள்.",


பரிகாரம் – வெள்ளிக்கிழமை துர்கை, லட்சுமி வழிபாடு செய்யவும்.

 

துலாம்

 

"இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள்.",


பரிகாரம் – புதன்கிழமை விஷ்ணு மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.


 விருச்சிகம்


தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் உருவாகும்.

 

பரிகாரம்- சுக்கிரன் நிவாரண ஹோமம்.

 

தனுசு


தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வாய்ப்புகள் கைகூடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


பரிகாரம்- வியாழக்கிழமையில் துளசிமாதா வழிபாடு.

 

மகரம்


உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். புதிய நண்பர்கள் சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


பரிகாரம்- சனிக்கிழமையில் சனீஸ்வரரை வழிபடுதல்.

 

கும்பம்


உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். நண்பர்கள் உதவியுடன் புதிய முயற்சிகள் வெற்றியடையும். ஆரோக்கியம் மேம்படும்.

 

பரிகாரம்- சனிக்கிழமையில் நவகிரக ஹோமம்.

 

மீனம்

       

புதிய முயற்சிகள் வெற்றியடையும். பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.

 

பரிகாரம்- வியாழக்கிழமை குருவைப் போற்றுதல்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இன்றைய ராசிபலன் – 06.04.2025

Copied!