Nigazhvu News
16 Apr 2025 5:24 AM IST

இன்றைய ராசிபலன் – 11.04.2025

Copied!
Nigazhvu News

மேஷம்:

"இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசால் ஆதாயம் உண்டாகும் சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் கூட உண்டாகலாம்.",


பரிகாரம்:

செவ்வாய் கோளின் அனுக்கிரஹம் பெற செவ்வாய் வழிபாடு செய்யவும்.

 

ரிஷபம்:

     "தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்ய வேண்டி வரும்.",


பரிகாரம்:

வெள்ளிக்கிழமை மஹாலட்சுமி வழிபாடு செய்யவும்.

 

மிதுனம் :

        "இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து சிலருக்கு கவலை உண்டாகலாம்.",


பரிகாரம்:

புதன் பகவானுக்கு கற்பூர ஆராதனை செய்யவும்.

 

கடகம் :

இன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்டநாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மொத்தத்தில் சோதனைகளை கடந்தே இன்றைய தினத்தில் நீங்கள் சாதனை படைப்பீர்கள்.


பரிகாரம்:

திங்கட்கிழமைகளில் அம்மன் கோவிலில் பால் அபிஷேகம் செய்யவும்.

 

சிம்மம்:

"எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.",

 

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.

 

கன்னி:

        "மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணி களிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் - மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.",


பரிகாரம்:

திருச்செந்தூர் முருகன் கோவில் வழிபாடு மிகவும் நன்மை தரும்.

 

துலாம்

புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக் கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

 

பரிகாரம்

வெள்ளிக்கிழமை துர்கை, லட்சுமி வழிபாடு செய்யவும்.


விருச்சிகம்

எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர் களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கி யப் பிரமுகர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. செலவுகளில் திட்டமிடுதல் அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.

 

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு செய்யவும்.


தனுசு

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

 

பரிகாரம்

 வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.

 

மகரம்

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி  வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

 

பரிகாரம்

சனிக்கிழமை சனி பகவான் மற்றும் ஆனந்தானந்த சாய்பாபா வழிபாடு செய்யவும்.


கும்பம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சமங்களை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

 

பரிகாரம்

 சனிக்கிழமை ஹனுமான், சனி பகவான் வழிபாடு செய்யவும்.


மீனம்

குடும்பத்தில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.


பரிகாரம்

 வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி, குரு பகவான் வழிபாடு செய்யவும்.

 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இன்றைய ராசிபலன் - 12.04.2025

இன்றைய ராசிபலன் - 10.04.2025

Copied!