Nigazhvu News
19 Apr 2025 5:01 PM IST

இன்றைய ராசிபலன் - 18.04.2025

Copied!
Nigazhvu News

மேஷம்

"இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும் புது பதவி, சொத்து வழக்கில் வெற்றி கிடைக்கும்.",


பரிகாரம் – வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி, குரு பகவான் வழிபாடு செய்யவும்.


ரிஷபம்

"எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத் தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.",


பரிகாரம் – சனிக்கிழமை ஹனுமான், சனி பகவான் வழிபாடு செய்யவும்.


மிதுனம்

"தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.",


பரிகாரம் – சனிக்கிழமை சனி பகவான் மற்றும் ஆனந்தானந்த சாய்பாபா வழிபாடு செய்யவும்.


கடகம்

"கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர் அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள் வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சாதனை படைக்கும் நாள்.",


பரிகாரம் – வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.


சிம்மம்

"மாறுபட்ட சிந்தனையாலும், புதிய யுக்திகளாலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் உங்களின் சிறப்பான செயல்பாடுகளால் வளர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான நிலை இருக்கும். சாதிக்கும் நாள்.",


பரிகாரம் – செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு செய்யவும்.


கன்னி

"இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள்.",


பரிகாரம் – வெள்ளிக்கிழமை துர்கை, லட்சுமி வழிபாடு செய்யவும்.


துலாம்

"இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களை விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள்.",


பரிகாரம் – புதன்கிழமை விஷ்ணு மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.


விருச்சிகம்

"இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை முன்னேற்றததைத் தரும் உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும்.",


பரிகாரம் – ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாடு செய்யவும்.


தனுசு

"இன்று நீண்டதூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.",


பரிகாரம் – திங்கட்கிழமை சிவன் வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்யவும்.


மகரம்

"புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. உறவி னர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வியா பாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.",


பரிகாரம் – புதன் பகவானுக்கான புதன்கிழமை வழிபாடு செய்யவும்.


கும்பம்

"இன்று எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் பல நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.",


பரிகாரம் – வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்யவும்.


மீனம்

"புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம்.. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்ப தால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.",


பரிகாரம் – செவ்வாய் கிரக பாதிப்பை குறைக்க செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலில் அர்ச்சனை செய்யவும்.



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இந்த வார ராசிபலன் 18-4-2025 to 24-4-2025 வரை.

இன்றைய ராசிபலன் - 17.04.2025

Copied!