
மேஷம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமைப்படும் சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்துசேரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். முயற்சியால் முன்னேற்றம் பெறும் நாள்.குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்பத்தின் வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு மாறு பட்ட அணுகுமுறையால், தீர்வு காண்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் முதலீடு செய்வதால் லாபம் பெருகும். மகிழ்ச்சியான நாள்.
பரிகாரம்
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி, குரு பகவான் வழிபாடு செய்யவும்.
ரிஷபம்
தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. இரவுநேரப் பயணம் தவிர்க்கவும்.. சிலருக்குக் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். விற்பனை வழக்கம்போல் நடைபெறும்.
பரிகாரம்
சனிக்கிழமை ஹனுமான், சனி பகவான் வழிபாடு செய்யவும்.
மிதுனம்
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் சில செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமை சனி பகவான் மற்றும் ஆனந்தானந்த சாய்பாபா வழிபாடு செய்யவும்.
கடகம்
எதிர்பார்ப்புகள் நிறை வேறும். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயன் அடைவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மாற்றம் தரும் நாள்.
பரிகாரம்
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.
சிம்மம்
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு உறவினர்களால் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு செய்யவும்.
கன்னி
வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி ஒன்றுமாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை துர்கை, லட்சுமி வழிபாடு செய்யவும்.
துலாம்
இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள்.
பரிகாரம்
புதன்கிழமை விஷ்ணு மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.
விருச்சிகம்
இன்றைக்கு எதிலும் நிதானமாக செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆனால், அதிகாரிகள் அனுசரணையாக இருப்பது ஆறுதல் தரும். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.
பரிகாரம்
சுக்கிரன் நிவாரண ஹோமம்.
தனுசு
பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் எதிர்பாராத நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.
பரிகாரம்
வியாழக்கிழமையில் துளசிமாதா வழிபாடு.
மகரம்
கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கணவன், மனைவிக்குள் அன்நியோன்னியம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முககிய அறிவுரைகளை தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.
பரிகாரம்
சனிக்கிழமையில் சனீஸ்வரரை வழிபடுதல்.
கும்பம்
இன்று எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் பல நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.
பரிகாரம்
சனிக்கிழமையில் நவகிரக ஹோமம்.
மீனம்
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தெய்வ அனுகூலம் உண்டாகும். ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்க இறைவனை வேண்டிக் கொள்ளவும்.
பரிகாரம்
வியாழக்கிழமை குருவைப் போற்றுதல்.
உங்கள் கருத்தை பதிவிடுக