
மேஷம்
"புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.",
பரிகாரம்: தங்க நகைகளை அணிந்தால் செல்வம் பெருகும்.
ரிஷபம்:
இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும் புது பதவி, சொத்து வழக்கில் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அனுமன் அல்லது முருகன் கோயிலில் வழிபாடு செய்யவும்.
மிதுனம்:
"தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.",
பரிகாரம்: புதன்கிழமை விஷ்ணு அல்லது துர்க்கை அம்மனை வழிபடவும்.
கடகம்:
பண வரவு திருப்திகரமாக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்கள் மற்றும் அதிகார பதவிகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
பரிகாரம்: திங்கட்கிழமை அம்மன் அல்லது சந்திரபகவான் வழிபாடு செய்யவும்.
சிம்மம்:
இன்று தெய்வீக ஈடுபாடு இருக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாடு செய்யவும்.
கன்னி:
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதியும் மனதில் சோர்வும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை விநாயகர் வழிபாடு சிறந்தது.
துலாம்:
உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் நாள். உங்கள் செயல்பாடுகளில் கண்ணும் கருத்து மாக, பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மற்றவர்களின் பாராட்டு கிடைக்கும். புதுத்தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உழைப்பால் உயர்வு பெறும் நாள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை லட்சுமி தேவி வழிபாடு செய்யவும்.
விருச்சிகம்:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர் பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு உண்டாகும். ஆனால், பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
பரிகாரம்: தசமி விரதம் மேற்கொள்வது சிறப்பு.
தனுசு:
தேவையான பணம் கையில் இருந்தாலும், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
பரிகாரம்: வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு செய்யவும்.
மகரம்:
புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவி னர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்கு வீட்டுக்கு வந்த பிறகும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
பரிகாரம்: ஏழை மக்களுக்கு உதவி செய்யலாம்.
கும்பம்:
எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை விஷ்ணு அல்லது ஹனுமான் வழிபாடு செய்யவும்.
மீனம்:
மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணி களிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் - மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.
உங்கள் கருத்தை பதிவிடுக