Nigazhvu News
06 May 2025 7:08 PM IST

2025 -மே மாத ராசி பலன்கள்:

Copied!
Nigazhvu News

மேஷம்

இந்த மாதத்தில் புதிய பொருட்களை சிலர் நல்ல முறையில் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்குத், திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் எல்லாம் கூட நல்ல படியாக நடந்தேறும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும். இப்படியாகக் குடும்பத்தில் சில சுப காரியங்கள் எல்லாம் கூட நல்ல படியாக நடந்தேறும். தொழில் அல்லது வியாபாரத்தில், நல்ல முன்னேற்றமான நிலை காணப்படும். சிலருக்குப் பழைய கடன்கள் கூட அடைபடும். சிலருக்கு கொடுத்த கடன் கூட வசூல் ஆகும் வாய்ப்பு உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட உடன் நல்ல திருப்பங்களும் ஏற்படும். மேலதிகாரி உங்களை மதிப்பார். எதிர்பார்த்த சலுகைகள் கூட இனி வரும் காலங்களில் உங்களுக்குக் கிடைக்கப்பெறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கூட சிலருக்கு நன்மையை பெருமளவில் செய்யும். மற்றபடி மாத இறுதியில், செலவுகள் அதிகரித்தாலும் கூட அவை அனைத்துமே பெரும்பாலும் தேவையான செலவுகளாகத் தான் இருக்கும். அதே சமயத்தில், குரு அருள் இருப்பதால் அந்தச் செலவுகளை சமாளிக்கும் அளவிற்குப் பணவரவும் காணப்படும். இந்த மாதத்தில், சிலருக்குப் பித்த சம்மந்தமான வியாதிகள் ஏற்பட இடம் உண்டு. இன்னும் சிலருக்குக் கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். நெருப்பு, ஆயுதங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை கவனமாகக் கையாளவும். மாணவர்கள் குறிப்பாக வண்டி - வாகனங்களில் செல்லும் சமயத்தில் வித்தைகள் செய்ய வேண்டாம். எனினும், சிலர் செலவு செய்து வாழ்க்கை வசதிகளை நல்ல முறையில் மேம்படுத்திக் கொள்வார்கள்.


பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்வது நிதி நிலைமைக்கு நல்ல பலன்களை தரும்.

 

ரிஷபம் :

வீட்டில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் மகிழ்ச்சி தரும். குறிப்பாகத் திருமணம் ஆகாத அன்பர்களுக்குத் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன் கூட வசூலாகும். சிலருக்குப் பழைய கடன்கள் அடைபடும். கணவன் - மனைவி ஒற்றுமை கூட சிறப்பாகத் தான் இருக்கும். மாத இறுதியில் அலைச்சல் இருந்தாலும் கூட உங்களது முயற்சி வீண் போகாது. எதையும் சமாளித்து நீங்கள் வெற்றி நடை போடுவீர்கள். பொருளாதார நிலையில் இருந்து வந்த மந்த நிலை கூட படிப்படியாக மாறும். இதனால் தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். உத்யோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கூட தடை இன்றி கிடைக்கப்பெறும். ஆனாலும், அதே சமயத்தில், தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை நன்கு யோசித்துச் செய்யுங்கள். முடிந்த வரையில் பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிருங்கள். கண் சம்மந்தமான பிரச்சனைகளை அலட்சியம் செய்யாதீர்கள். சிலரை நல்ல வாய்ப்புகள் எல்லாம் தேடி வரும். மாணவர்கள் முயற்சி செய்து படித்தால் நிச்சயம் பரிசுகளைக் கூட வெல்வீர்கள். மொத்தத்தில், பெரும்பாலும் அனைத்துத் தரப்பினருக்கும் இந்த மாதத்தில் நற்பலன்கள் ஏற்பட இடம் உண்டு. மாத பிற்பகுதியில் பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள்.

 

பரிகாரம்: புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்தால் வேலை மற்றும் நிதி வளர்ச்சி பெரும்.

 

மிதுனம்

பணத் தேவைகள் அதிகரிக்கும் கால கட்டம் என்பதால் முடிந்த வரையில் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளப் பாருங்கள். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் அதுவும் இக்கால கட்டத்தில் அதிகம் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சற்று தாமதம் ஆகலாம். எனினும், கிடைக்காமல் இருக்காது. புதிய வேலை தேடுபவர்கள் இப்போதைக்குக்  கிடைக்கும் வாய்ப்பை பயன் படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்ணைப் பெற இயலும். அதேபோல, மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் சமயத்தில் மிகுந்த கவனமுடன் ஈடுபடுவது நல்லது. வண்டி - வாகனங்களில் செல்லும் சமயத்தில் குறிப்பாக வித்தைகளை செய்யாதீர்கள். மொத்தத்தில், எதிலும் நீங்கள் பொறுமையுடன் இருந்து கொள்ளுங்கள். பல விஷயங்களில், எதிர்நீச்சல் போட்டுத் தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூட சிறு, சிறு பாதிப்புகள் தோன்றலாம். உணவு விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் கூட எதிர்பாராத உதவிகள் சிலருக்குக் கிடைக்கப் பெறும். அதனால் தேவைகள் நல்ல படியாக நிறைவேறும். மாத பிற்பகுதியில், கணவன் - மனைவி இடையே சின்னச் - சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட அதனால் ஒற்றுமை என்பது குறையாது. அதேபோல, தேவை இல்லாத வாக்கு வாதங்களை தவிர்த்து குடும்பத்தில் உள்ளவர்களை மட்டும் அதிகம் அனுசரித்துச் செல்லப் பாருங்கள். எடுக்கும் காரியங்களில் சிறு, சிறு தடைகளுக்குப் பிறகே வெற்றி கிடைக்கப் பெறும். இந்த மாதம் மட்டும் விநாயகரை அருகம்புல் சாற்றி கும்பிட்டு வாருங்கள் அப்போது அனைத்திலும் நன்மையே நடக்கும்.

 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை மங்களக்கவசம் பாராயணம் செய்ய வேண்டும். முருகன் வழிபாடு சிறந்த பலன் தரும்.

 

கடகம்

இந்த மாதத்தில் சிலருக்குப் பெண்கள் வழியில் சில அவமானங்கள் வந்து போக இடம் உண்டு. அதனால் தேவை இல்லாமல் பெண்கள் விஷயத்தில் கவனம் செலுத்தாதீர்கள். நீங்கள் உண்டு உங்களது வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். சிலருக்குக் காதல் விவகாரங்கள் தொல்லை தரலாம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். சிலருக்கு பிள்ளைகள் வழியில் அதிக மனக் கவலைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் சில செலவுகளையும் சந்திக்க நேரிடலாம். முடிந்தவரையில் பிள்ளைகளை பொறுமையாகக் கையாளுங்கள். அவர்களுக்கு அனைத்தையும் சொல்லிப் புரிய வையுங்கள். மாணவர்கள் கூட கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் சிலருக்குத் தாமதம் ஆகலாம். எனினும், வழக்குகள் மாத பிற்பகுதியில் சிலருக்கு சாதகம் ஆகும். அதேபோல, மாத பிற்பகுதியில் எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் கூட அதிகரிக்க இடம் உண்டு. பணத் தேவைகள் கூட பூர்த்தி ஆகும். சிலருக்கு கேட்ட இடத்தில் இருந்து மாத பிற்பகுதியில் பணம் வந்து சேர இடம் உண்டு. இதனால் உங்களது தேவைகள் நல்ல படியாக நிறைவேறும் வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவி இடையே மட்டும் அதிகம் அனுசரித்துச் செல்வது நல்லது. குல தெய்வ வழிபாடு ஓரளவு நன்மை தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலுமே இறுதியில் நன்மை உண்டு. தொழில் அல்லது வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.

 

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்ல பலன் தரும். கோயிலில் கத்தரி அல்லது சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வழங்கவும்.

 

சிம்மம்

இந்த மாதத்தில் பொருளாதாரம் சற்று ஏற்ற - இறக்கமாக இருந்தாலும் கூட இறுதியில் உங்களது தேவைகள் நல்ல படியாக நிறைவேறும். சிலருக்கு மகான்களை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கப்பெறும். இன்னும் சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்துக் காணப்படும். குல தெய்வ பிரார்த்தனைகளை சிலர் நிறைவேற்றுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை நன்கு ஆலோசித்துச் செய்யவும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். உத்யோகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ள வேண்டாம். பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம். குறிப்பாகப் பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களிலும் கூட கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். அலைச்சல் அதிகரித்துக் காணப்படும் தான். எனினும், விநாயகரை நினைத்து முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக உங்களது முயற்சி வீண் போகாது. சொந்த பந்தங்களிடம் கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய தருணம் இது. சிலருக்கு இருப்பிட மாற்றம் ஏற்படலாம். மொத்தத்தில் பொறுமை மற்றும் விடா முயற்சியைக் கைக்கொண்டு சாதிக்க வேண்டிய மாதம். எனினும், இந்த மாதத்தை பொறுத்தவரையில் பெண்கள் மூலமாக சில உபத்திரவங்கள் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாகத் தன்வந்திரி பகவானை வணங்கி வாருங்கள். புதிதாக அறிமுகம் ஆகும் நண்பர்கள் இடத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வந்து போகலாம். அதனால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.

 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுவது நிதி முன்னேற்றம் தரும். ஆலயத்திற்கு சென்று விளக்கேற்றி வேண்டுதல் செய்யவும்.

 

கன்னி

இந்த மாதத்தில் அலைச்சல் அதிகரித்துக் காணப்படும் தான். எனினும், விநாயகரை நினைத்து முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக உங்களது முயற்சி வீண் போகாது. சொந்த பந்தங்களிடம் கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய தருணம் இது. சிலருக்கு இருப்பிட மாற்றம் ஏற்படலாம். மொத்தத்தில் பொறுமை மற்றும் விடா முயற்சியைக் கைக்கொண்டு சாதிக்க வேண்டிய மாதம். பொருளாதாரம் சற்று ஏற்ற - இறக்கமாக இருந்தாலும் கூட இறுதியில் உங்களது தேவைகள் நல்ல படியாக நிறைவேறும். சிலருக்கு மகான்களை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கப்பெறும். இன்னும் சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்துக் காணப்படும். குல தெய்வ பிரார்த்தனைகளை சிலர் நிறைவேற்றுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை நன்கு ஆலோசித்துச் செய்யவும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். உத்யோகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ள வேண்டாம். பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம். குறிப்பாகப் பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களிலும் கூட கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். சிலருக்கு பெண்கள் மூலமாக சில உபத்திரவங்கள் ஏற்பட இடம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாகத் தன்வந்திரி பகவானை வணங்கி வாருங்கள். புதிதாக அறிமுகம் ஆகும் நண்பர்கள் இடத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வந்து போகலாம். அதனால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். 

 

பரிகாரம்: சனிக்கிழமை ஏழைமக்களுக்கு உணவு வழங்குவது சிறப்பான பலனை தரும். அனுமான் வழிபாடு செய்வது நல்லது.

 

துலாம்

உத்யோகத்தில் வேலை அதிகரிக்கலாம். கொஞ்சம் கூடுதல் நேரம் கூட உழைக்க வேண்டி இருக்கும். எனினும், எதிர்காலத்தில் இதற்கான நல்ல பலனை நீங்கள் அடைவீர்கள். அதனால் கவலை கொள்ளாதீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை, வேலை பளு காரணமாக பிறரிடம் ஒப்படைத்து விடாதீர்கள். முடிந்த வரையில் நேர அவகாசம் எடுத்து நீங்களே பாருங்கள். அதேபோல, புதிய வேலை தேடுபவர்கள் இப்போதைக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மொத்தத்தில் இது ஒரு சுமாரான மாதமே. சில விஷயங்களில் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டி இருக்கும். மாத பிற்பகுதியில், உடல் ஆரோக்கியம் சற்று ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். அதனால் சில மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சிலருக்குத் தாய் வழியில் உதவிகள் கிடைக்கப் பெறலாம். சிலருக்குப் புதிய வீடு, வாகனம் வாங்கக் கூடிய யோகம் கூட கிடைக்கப் பெறும். உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ளுங்கள். பணவரவு அவ்வப்போது உங்களது தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சிலர் ஆடம்பரப் பொருள்களைக் கூட வாங்கி மகிழலாம். இன்னும் சிலர் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்ள இடம் உண்டு. கணவன் - மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மேலும் இந்த மாதத்தில், புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் மட்டும் அகலக் கால் வைக்காமல் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக வெகு தூரப் பயணங்களை சிலர் மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். முடிந்த வரையில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். சிலருக்கு வீண் விரயங்கள் அவ்வப்போது வந்து போகலாம். வழக்குகளில் சிலருக்கு இழுபறி நிலை ஏற்பட இடம் உண்டு. அதனால், எதையும் நீங்கள் பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். மற்றபடி, தொழில் அல்லது வியாபாரத்தில் மந்த நிலை அவ்வப்போது காணப்பட்டாலும் கூட இறுதியில் போட்டிகளை சமாளித்து லாபத்தை பெறுவீர்கள்.


பரிகாரம்: புதன்கிழமை விஷ்ணுவை வழிபடுவது பணி மற்றும் நிதியில் நல்ல பலன்களை தரும்.

 

விருச்சிகம்

இந்த மாதத்தில் சிலருக்குப் பற்கள், எலும்புகளில் பிரச்சனைகள் வரலாம். செலவுகள் மாத முற்பகுதியில் கூடலாம் எனினும் பிற்பகுதியில் சில நன்மைகள் உண்டு. மொத்தத்தில், இது ஒரு சுமாரான மாதம் தான். அலைச்சல் ஏற்படாமல் இருக்கப் பிரயாணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளவும். வெளி இடங்களில் சாப்பிடும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். சிலருக்கு பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன மனக்கவலைகள் வந்து போகலாம். பிள்ளைகள் வழியில் சில செலவுகளும் ஏற்படலாம். கொடுக்கல் - வாங்கல் சம்பந்தமாக பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனம் தேவை. பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்தால் வீண் வம்பு - வழக்குகளில் இருந்து நீங்கள் தப்பலாம். வாக்குறுதிகளை போராடிக் காப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். முடிந்த வரையில் உடன் இருப்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லப் பாருங்கள். வண்டி - வாகனங்களில் செல்லும் சமயத்தில் அதிக நிதானத்துடன் சென்று வாருங்கள். சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக சில செலவுகள் ஏற்படலாம். பேச்சில் அதிக நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வேறு இடத்தில் கூட பணி செய்ய நேரிடலாம். அதிலும், இந்த மாதத்தில், கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால் பொறுமையாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள். மாத பிற்பகுதியில், பொருளாதார மந்த நிலை படிப்படியாக மாறும். இதனால் இறுதியில் குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். எனினும், முடிந்த வரையில் ஆடம்பரச் செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளப் பாருங்கள்.

 

பரிகாரம்: சனிக்கிழமை அனுமான் வழிபாடு செய்ய வேண்டும். ஏழைமக்களுக்கு உணவு வழங்குவது சிறந்த பலனை தரும்.

 

தனுசு

இந்த மாதத்தில் சிலருக்குக் கொடுத்த கடன் வசூலாகும். புதிய வீடு, மனை வாங்கக் கூடிய பாக்கியம் சிலருக்குக் கிடைக்கப்பெறும். மாணவர்கள் இனி வரும் காலங்களில் பாடங்களை புரிந்து படிப்பார்கள். பெண்கள் ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். இப்படியாக அனைத்து விதங்களிலும் நல்ல பலன்கள் தான் உங்களுக்கு ஏற்படும்.  ஓரளவு மாத கிரகங்கள் சாதகமாக இருப்பதால், கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்கள் கூட ஓரளவு லாபத்தை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் கூடும். சிலருக்கு அரசு உதவிகள் கூட ஆதாயம் தரும். பெரிய மனிதர்களின் நட்பு சிலருக்குக் கிடைக்கப்பெறும். அதனால், எதிர்காலத்தில் பல நல்ல பலன்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்கள் இடையே மட்டும் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். உங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும்பாலான பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். உங்களது முயற்சிகளுக்கு உரிய நல்ல பலன் உங்களுக்குக் கிடைக்காமல் போகாது. பொருளாதார நிலையில் மேன்மை உண்டாகும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து பேதங்கள் கூட குறையும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கூட கிடைக்கப்பெறும். பல்வேறு பொது நலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மட்டும் கூட்டாளிகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பாருங்கள். புத்திர வழியில் மட்டும் சிறு, சிறு கவலைகள் சிலருக்கு ஏற்பட்டு விலகும். எனினும், பெரிய கெடுதல்களுக்கு வாய்ப்பு இல்லை. உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் இது வரையில் இருந்து வந்த மந்த நிலை விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றி உண்டு. எனினும், தாயாரின் உடல் நிலை மீது மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடி பெரும்பாலும் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும்..


பரிகாரம்: சந்திர பகவானை வழிபடுவது மன அமைதியை தரும். ஒவ்வொரு திங்கள்கிழமையும் கடல் நீரில் விளக்கேற்றி வேண்டுதல் செய்வது பலனை தரும்.

 

மகரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை பாக்கி இல்லாமல் செலுத்தி விடுவது நல்லது. சிலருக்கு அரசு வகையில் கூட ஆதரவு குறையலாம். சிலருக்குப் புதிய கடன்கள் ஏற்படலாம். நிறைய விரய செலவுகளை சந்திக்கும் காலம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருந்து கொள்ளப் பாருங்கள். இந்த மாதத்தில் பெரும்பாலும் கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், எதிலும் கொஞ்சம் நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். பணவரவு சிலருக்குத் தாமதம் ஆனாலும் கூட இறுதியில் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். கணவன் - மனைவி இடையே அந்நிய நபர்கள் தலையீடு இல்லாமல் பிரச்சனைகளை பேசித்தீர்க்கப் பாருங்கள். சிலருக்கு சொத்துக்கள் விஷயமாய் கூட சுப விரயங்கள் ஏற்பட இடம் உண்டு. பேச்சில் பொறுமையும் - நிதானமும் தேவை. வெளியூர் பயணங்கள் சிலருக்கு அனுகூலத்தை தந்தாலும் கூட வாகனம் ஓட்டுவதை தொழிலாகக் கொண்டவர்கள் சற்று கூடுதல் கவனமுடன் இரவுப் பயணத்தை மேற்கொள்ளவும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் திடீர் என்று ஒரு வித தேக்க நிலை வந்து போனாலும் கூட, இறுதியில் அதனை சமாளித்து விடுவீர்கள். மேலதிகாரிகளிடம் அதிகம் வாக்கு வாதம் செய்யாமல் இருப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் வேலை பளுவை குறைக்க உடன் இருப்பவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டிய தருணம் இது. முடிந்த வரையில் பிறருக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கப்பாருங்கள்.


பரிகாரம்: குரு பகவான் அருளை பெற, தட்சிணாமூர்த்தி வழிபாடு முக்கியம். தியாகராஜர் பாடல்களை பாடுவது சிறந்த பரிகாரமாகும்.

 

கும்பம்

இந்த மாதத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகம் இருந்தாலும் கூட மேலதிகாரிகள் தயவு அவ்வப்போது ஆறுதல் தரும். கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கப்பெறும். பொருளாதாரத்தில் கொஞ்சம் ஏற்ற - இறக்கமான சூழ்நிலை தான் காணப்படும் என்றாலும் கூட நீங்கள் சமாளித்து விடுவீர்கள். அலைச்சல் இருந்தாலும் கூட உங்கள் தேவைகள் இறுதியில் பூர்த்தி ஆகும். சுப காரிய பேச்சு வார்த்தைகளில் சின்னச் சின்ன தடைகள் இருந்தாலும் கூட இறுதியில் நல்லபடியாக நடந்தேறும். குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் கூட அதனால் ஒற்றுமை குறைய வாய்ப்பு இல்லை. தொழில், வியாபாரத்தில் மட்டும் போட்டிகள் அதிகம் இருக்கத்தான் செய்யும். எனினும் இறுதியில் வேண்டிய லாபத்தை எதிர்நீச்சல் போட்டு பெற்று விடுவீர்கள். மொத்தத்தில் கோபத்தை குறைத்து முயற்சியாலும், பொறுமையாலும் சாதிக்க வேண்டிய மாதம் இது. இக்கால கட்டத்தில் விநாயக வழிபாடு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.

 

பரிகாரம்: பிரதோஷ தினத்தில் சிவன் வழிபாடு செய்வது நல்ல பலன்களை தரும். சூரிய பகவானை தினமும் காலை வழிபடுங்கள்.

 

மீனம்

இந்த மாதத்தில் தொழில் - வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம்  இல்லாவிட்டாலும் கூட தொழில் தேக்கம் ஏற்படாது. உத்யோகஸ்தர்கள் வேறு வேலை மாறுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வது நல்லது. பேச்சினால் குடும்பத்தில் நிறைய சண்டைகள் ஏற்படலாம். அதனால், முடிந்த வரையில் பேச்சை குறைத்து காரியத்தில் கண்ணாக இருக்கப் பாருங்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் தாமதம் ஆனாலும் கூட இறுதியில் உங்களது முயற்சி வீண் போகாது. அதனால் கவலை வேண்டாம். எனினும், மனதில் தைரியம், தன்னம்பிக்கை அவ்வப்போது அதிகரிக்கும். எதிரிகளை வெல்லக் கூடிய ஆற்றல் கிடைக்கப்பெறும். எதிர்ப்புகள் இருந்தாலும் கூட அதனை லாவகமாகக் கையாண்டு முன்னேற்றம் அடைவீர்கள். சிலர் ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழலாம். வழக்குகள் சிலருக்கு இந்த மாதத்தில் அனுகூலமாக முடிய இடம் உண்டு. அனைத்திலும் வெற்றி கிடைக்கப்பெறும். உத்யோகத்தில், மேலதிகாரியை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். விடுப்பு எடுக்கும் சமயத்தில் மேலதிகாரி தொல்லை தராமல் இருக்க இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள். மொத்தத்தில், உத்யோகத்தைப் பொறுத்தவரையில் நெருக்கடிகள் அதிகம் இருக்கும் கால கட்டம் தான். எனினும், சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் இப்போதைக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் கூட கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். முடிந்தால் கோளறு பதிகம் இனி வரும் காலங்களில் படித்து வாருங்கள்.

 

பரிகாரம்: பிள்ளையார் வழிபாடு மிக முக்கியம். புதன் பகவானின் கருணையை பெற, விஷ்ணு ஆலயத்தில் துளசி மாலை அணிவிக்கலாம்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இன்றைய ராசிபலன் - 30.04.2025

இன்றைய ராசிபலன் - 29.04.2025

Copied!