கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி அமைப்பு பொறியியல் துறை சார்பில் 'கட்டுமான தொழில்நுட்பத்தில் 3டி பிரிண்டிங்' என்ற தலைப்பில் ஐந்து நாள் பேராசிரியர் மேம்பாட்டு பயிற்சி இணைய வழியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலாட்டில் புத்தூரில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரி முதல் நாளில் ‘3டி கான்க்ரீட் பிரிண்டிங்: தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால வாய்ப்புகள்’ குறித்து சென்னை எல்&டி கட்டுமான ஆராய்ச்சி மற்றும் சோதனை மையத்தின் உதவி மேலாளர் முனைவர் தயாலினி பாலசுப்ரமணியன் பேசினார். இரண்டாம் நாளில் ‘கன்ஸ்டரக்க்ஷன் பை கான்க்ரீட் 3டி பிரிண்டிங்' என்ற தலைப்பில் திருப்பதி, இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஏ.வி.ராகுல் பேசினார். மூன்றாம் நாளில் 'நிலையான கட்டுமானத்திற்கான 3டி கான்க்ரீட் பிரிண்டிங்' என்ற தலைப்பில் சென்னை, ட்வஸ்தா வணிக பொருள் நிறுவனத்தின் தலைவர் முனைவர் சாந்தனு பட்டாச்சார்ஜி, நான்காம் நாளில் ‘3டி ப்ரிண்டிங் கான்க்ரீட்டின் ரீயோலாஜிக்கல் தன்மை’ குறித்து சென்னை, சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி.-யின் முதன்மை விஞ்ஞானி முனைவர் பிரதாப் ரஞ்சன் ப்ரேம், இறுதி நாளில் '3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தி்ல் டோபாலஜி' என்ற தலைப்பில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயபிரகாஷ் ஆகியோர் பேசினர்.
இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இணைய வழியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வு குறித்து பேசுகையில், இந்த ‘3டி பிரிண்டிங்’ தொழிலநுட்பம் அமைப்பு பொறியியல் துறைக்கு இன்றியமையாததாக விளங்குகிறது என்றும் இதன் எதிர்கால தேவை குறித்தும் நன்கு தெரிந்துகொண்டோம் என்றும் கூறினர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல், முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி, துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ஐ.பத்மநாபன் அறிவுறுத்தலின்படி ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சி.செல்லா கிப்டா, ஆர்.ஹர்ஷனி மற்றும் துறைப்பேராசிரியர்கள் சிறப்பாகசெய்திருந்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக