Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

குழந்தைகள் கல்வி கற்க பெற்றோர்கள் ஒத்துழைப்பு தருவது நமது கடமை என்பதனை அனைவரும் உணர வேண்டும்

Copied!
Nigazhvu News

குழந்தைகள் கல்வி கற்க பெற்றோர்கள் ஒத்துழைப்பு தருவது நமது கடமை என்பதனை அனைவரும் உணர வேண்டும் - எட்டயபுரம் அருகே நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  நடைபெற்ற உயர்வுக்குப்படி என்ற வழிகாட்டல் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு


உயர்வுக்குப்படி என்ற வழிகாட்டல் நிகழ்ச்சி மூலமாக கல்லூரியில் சேர்ந்த 123 மாணவர்கள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழஈராலில் உள்ள தென் போஸ்கோ கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  உயர்வுக்குப்படி என்ற வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி, கல்லூரியில் இடைநிற்றலை தவிர்த்து மீண்டும் மாணவர்கள் கல்வி தொடருவதற்காக இந்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்;. அப்போது மாவட்ட ஆட்சியர் பேசுகையில் குழந்தைகள் கல்வி கற்க பெற்றோர்கள் ஒத்துழைப்பு தருவது நமது கடமை என்பதனை அனைவரும் உணர வேண்டும், தமிழ்நாடு கல்வியில் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் குழந்தைகளை பணியில் ஈடுபடுத்த கூடாது,  பல பெற்றோர்கள் தீப்பெட்டி, நூற்பாலைகளில் பணியாற்றி வருகின்றனர். தங்கள் குழந்தைகள் கடைசி வரை பணியாற்ற வேண்டுமா என்பதனை சிந்தித்து பார்க்க வேண்டும், அவர்களை கல்வி கற்க வைத்தால் அவர்கள் ஏதாவது தொழில் நிறுவனம் அல்லது அரசு அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றுவர்கள், எனவே அவர்களுக்கு கல்வி கற்க உதவி புரிய வேண்டும் என்றார்.


12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லாத மாணவர்களை அழைத்து பேசிய மாவட்ட ஆட்சியர், தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்று அறிவுறுத்தியது மட்டுமின்றி, அந்த மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்படிவங்களையும் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வி அவசியம் குறித்த நாட்டுபுற பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சயில் கல்வி இடைநிற்றால் நின்ற 174 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டதில் 123 மாணவ- மாணவிகள் கல்லூரியில் சேர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

மாணவர்கள் தாய் தந்தையர் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ சண்முகையா மாணவர்களுக்கு அறிவுரை

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இணையவழி ஐந்து நாள் பேராசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

Copied!