Nigazhvu News
04 Apr 2025 9:02 PM IST

இன்றைய ராசிபலன் - 1.4.2025

Copied!
Nigazhvu News

மேஷம்

இன்று உங்களுக்கு நல்ல செய்தி வரும். பணியில் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். மனநிலை சமநிலைமை யுடன் செயல்படுங்கள். குடும்பத்தில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். பயணங்கள் அனுகூலமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

பரிகாரம்:  செவ்வாய்க்கிழமை அனுமன் அல்லது முருகன் கோயிலில் வழிபாடு செய்யவும்.

 

ரிஷபம்

தொழில் தொடர்பான பயணம் உங்களுக்கு எதிர்பாராத லாபத்தை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும்.

 

பரிகாரம்:  தங்க நகைகளை அணிந்தால் செல்வம் பெருகும்.

 

மிதுனம்

இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சி காண்பீர்கள். பணியாளர்கள் பாராட்டைப் பெறுவார்கள். ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பரபரப்பான நாள், ஆனால் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

 

பரிகாரம்வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.

 

கடகம்

இன்று உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தொழிலில் புதிய பொறுப்புகள் வரும். குடும்ப உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். பணவரவுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

 

பரிகாரம்சனிக்கிழமை விஷ்ணு அல்லது ஹனுமான் வழிபாடு செய்யவும்.

 

 

சிம்மம்

சிறு சிக்கல்கள் இருக்கலாம். மனதை சாந்தமாகக் கொண்டிருங்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள். பணியாளர்களின் ஆதரவு. குடும்பத்தில் நிம்மதி நிலவும். பயணங்களால் பயன் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.

 

பரிகாரம்ஏழை மக்களுக்கு உதவி செய்யலாம்.

 

கன்னி

உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய தொடர்புகள் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய திட்டங்களை மேற்கொள்ளலாம். மனதில் உற்சாகம் காணப்படும்.

 

பரிகாரம்: வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு செய்யவும்.

 

துலாம்

இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.

 

பரிகாரம்: தசமி விரதம் மேற்கொள்வது சிறப்பு.

 

 

விருச்சிகம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை லட்சுமி தேவி வழிபாடு செய்யவும்.

 

தனுசு

கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

 

பரிகாரம்: புதன்கிழமை விநாயகர் வழிபாடு சிறந்தது.

 

 

மகரம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

 

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாடு செய்யவும்.

 

கும்பம்

கடினமான வேலையையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும் . தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில்  சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

 

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்.

 

மீனம்

தொழிலில் எதிர்பாராத மாற்றங்கள். மனஅமைதி பெற தியானம் செய்யுங்கள். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் உயர்வு பெற வாய்ப்பு. பயணங்களில் சிரமங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் புதிய சந்தோஷம். புது நண்பர்கள் அறிமுகம்.

 

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி, துளசிப் பூஜை செய்யவும்.

 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஏப்ரல் 2025- மாதந்திர ராசி பலன்!...

இன்றைய ராசிபலன் - 31.03.2025

Copied!