Nigazhvu News
04 Apr 2025 9:07 PM IST

ஏப்ரல் 2025- மாதந்திர ராசி பலன்!...

Copied!
Nigazhvu News

மேஷம்

இந்த மாதத்தில் சிலருக்குக் கொடுத்த கடன் வசூலாகும். புதிய வீடு, மனை வாங்கக் கூடிய பாக்கியம் சிலருக்குக் கிடைக்கப்பெறும். மாணவர்கள் இனி வரும் காலங்களில் பாடங்களை புரிந்து படிப்பார்கள். பெண்கள் ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். இப்படியாக அனைத்து விதங்களிலும் நல்ல பலன்கள் தான் உங்களுக்கு ஏற்படும். ஓரளவு மாத கிரகங்கள் சாதகமாக இருப்பதால், கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்கள் கூட ஓரளவு லாபத்தை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் கூடும். சிலருக்கு அரசு உதவிகள் கூட ஆதாயம் தரும். பெரிய மனிதர்களின் நட்பு சிலருக்குக் கிடைக்கப்பெறும். அதனால், எதிர்காலத்தில் பல நல்ல பலன்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்கள் இடையே மட்டும் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். உங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும்பாலான பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். உங்களது முயற்சிகளுக்கு உரிய நல்ல பலன் உங்களுக்குக் கிடைக்காமல் போகாது. பொருளாதார நிலையில் மேன்மை உண்டாகும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து பேதங்கள் கூட குறையும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கூட கிடைக்கப்பெறும். பல்வேறு பொது நலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மட்டும் கூட்டாளிகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும்.


பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்வது நிதி நிலைமைக்கு நல்ல பலன்களை தரும்.

ரிஷபம் :

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சல் தரலாம். எனினும், இறுதியில் நல்லபடியாக நடந்தேறும். தொழில், வியாபாரம் செய்வோர் கூட்டாளிகளிடத்தில் கருத்து வேறுபாடு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்காமல் ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொள்ளுங்கள். அதே போல, வண்டி வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூட அதிக கவனத்துடன் சென்று வாருங்கள். கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். மாத இறுதியில் அரசு வகையில் சிலருக்கு ஆதரவு குறையலாம். சிலர் செலவு செய்து வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். அதனால் கையிருப்புக் குறையலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் நேர்முக - மறைமுக எதிர்ப்புகளைத் தாண்டித் தான் முன்னேறும் படியாக இருக்கும். மொத்தத்தில், பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு இந்த மாதத்தில் சாதகமாக இல்லை. அதனால், எதிலும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் அந்நிய நபர்கள் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். குடும்ப விவகாரங்களையும் அந்நிய நபர்களிடத்தில் பகிராதீர்கள். குறிப்பாகப் பண விஷயத்தில் அதிக சிக்கனமாக இருந்து கொள்ளுங்கள். முடிந்த வரையில் குடும்ப உறுப்பினர்கள் இடையே கோபத்தை குறைத்து நிதானத்தை மேற்கொள்ளப்பாருங்கள். இந்தக் காலத்தில் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று அதிகரித்துக் காணப்படலாம். கோபத்தைக் குறைத்துப் பொறுமையுடன் இருந்தால் காரியம் சாதிக்கலாம். மொத்தத்தில் இது ஒரு சுமாரான மாதம்.


பரிகாரம்: புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்தால் வேலை மற்றும் நிதி வளர்ச்சி பெரும்.

மிதுனம்

வண்டி வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் சென்று வாருங்கள். கணவன் - மனைவி இடையே அந்நியர் தலையீடு இன்றி நீங்களே பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். மற்றபடி, கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். நவ கிரக வழிபாடுகளை செய்து வாருங்கள். அவசியம் கோளறு பதிகம் படியுங்கள். மொத்தத்தில், நன்மை - தீமை என இரண்டும் கலந்து நடக்கும் கால கட்டம் இது. உடல் ரீதியாக ஒரு வித சோர்வு ஏற்பட இடம் உண்டு. அலைச்சல் அதிகம் இருக்கும். அதனால் எதையும் நீங்கள் திட்டமிட்டுச் செய்வது நல்லது. உத்யோக ரீதியாக திடீர் பிரயாணங்களைக் கூட நீங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். முடிந்த வரையில் எதிலும் நீங்கள் நிதானமாகச் செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு உடலில் உஷ்ண சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளப் பாருங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகம் காணப்படும். எனினும், அவற்றை எல்லாம் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை மட்டும் முடிந்த வரையில் தவிர்க்கப் பாருங்கள். அதேபோல, யாருக்கும் ஜாமீன் கொடுத்து விடாதீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்க இடம் உண்டு. எனினும் சமாளித்து விடுவீர்கள். உடன் பணி புரிபவர்களை மட்டும் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். அவ்வப்போது, எதிர்பாராத இடத்தில் இருந்து கூட தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கப்பெறும். மொத்தத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் கூட அதனை சமாளித்து நீங்கள் வெற்றி நடை போடுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை மங்களக்கவசம் பாராயணம் செய்ய வேண்டும். முருகன் வழிபாடு சிறந்த பலன் தரும்.

கடகம்

இந்த மாதத்தில் தொழில், வியாபாரத்தில் புதிய போட்டியாளர்களை சந்தித்து எதிர்நீச்சல் போட்டு லாபத்தை அடைவீர்கள். பொருள் தேக்கம் அடைய வாய்ப்பு இல்லை. எனினும், வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகைகளை அறிவிக்க வேண்டி இருக்கும். அதனால் கொஞ்சம் லாபம் குறையலாம். சனியின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் வெளி இடங்களில் செல்லும் சமயத்தில் உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். கையிருப்பை வெளியில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். சிலருக்கு இந்த மாதத்தில் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வந்து போகலாம். அதனால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக உடல் ஆரோக்கியத்திலும் கூட கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சிலருக்குப் புதிய பொறுப்புகள் தரப்படலாம். மாத பிற்பகுதியில் மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளை வெல்லக் கூடிய ஆற்றல் கிடைக்கப்பெறும். வழக்குகள் கூட சாதகம் ஆகும். அரசாங்க கெடுபிடிகள் குறையும். அதே சமயத்தில், தாய் வழி உறவினர்களிடத்தில் மனக் கசப்புகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நெருங்கிய உறவுகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். தாயாரின் உடல் நிலையில் கூட கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சிலர் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். இன்னும் சிலர் இந்த மாதத்தில் பழைய நண்பர்களைக் கூட சந்தித்து மகிழ்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க குல தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். மாத இறுதியில் உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவுகளை எடுத்தால் வாழ்க்கை வளம் பெறும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்ல பலன் தரும். கோயிலில் கத்தரி அல்லது சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வழங்கவும்.

சிம்மம்

பணியில் கவனக் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகாரிகளுடன் வாக்கு வாதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அல்லது துறை மாற்றங்கள் அலைச்சலைத் தரலாம். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நீங்களே நேரடியாகச் செய்யுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லப்பாருங்கள். வேலை பளு அதிகம் இருக்கிறதே என்று வேலையை விட்டு விடாதீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கூட இப்போதைக்கு கிடைக்கும் வேலையை செய்வது நல்லது. மேற்படி தீமைகள் விலக வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி மஞ்சள் நிற பூக்கள் கொண்டு நவ கிரகத்தில் இருக்கும் குரு பகவானை வழிபட்டு வாருங்கள். இதனால் மேற்சொன்ன தீய பலன்கள் குறைந்து நல்ல பலன்கள் ஏற்பட இடம் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகளுக்கு இடையே லாபம் பார்க்க வேண்டிய நிலை காணப்படும். அதே சமயத்தில், சிலருக்கு கேட்ட இடத்தில் இருந்து உதவிகளும் கிடைக்கப்பெறும். செலவுகள் அதிகம் காணப்பட்டாலும் இறுதியில் சமாளித்து விடுவீர்கள். மற்றபடி, சிலருக்கு பிள்ளைகள் வழியில் சில மனக் கவலைகள் வந்து போக இடம் உண்டு.


பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுவது நிதி முன்னேற்றம் தரும். ஆலயத்திற்கு சென்று விளக்கேற்றி வேண்டுதல் செய்யவும்.


கன்னி

இந்த மாதத்தில் கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். சிலருக்கு கடன்கள் முழுவதுமாக கூட அடைபடும். இது நாள் வரையில் இருந்து வந்த வம்பு, வழக்குகளில் கூட வெற்றி கிடைக்கப்பெறும். ஒப்பந்தத் தொழில் செய்பவர்கள் கூட நன்மை அடைவார்கள். புதிய முயற்சிகளில் வெற்றியும், சிறப்பான லாபங்களும் கிடைக்கப்பெறும். மாத இறுதியில் குடும்பத்தில் சுப காரியங்கள் நல்ல படியாகக் கைகூடும். முயற்சிகள் அனைத்திலும் நல்ல பலன்கள் உண்டு. அதனால் கவலை வேண்டாம். சிலருக்கு பிள்ளைகள் வழியிலும் கூட நன்மையான பலன்களுக்கு இடம் உண்டு. பொருளாதாரம் கூட நல்ல விதங்களில் மேம்படும். குடும்பத் தேவைகள் நல்ல படியாக நிறைவேறும். பிரிந்து சென்ற உறவுகள் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். பூமி, மனை வாங்கக் கூடிய யோகம் சிலருக்கு உண்டாகும். சிலருக்குப் பணம் பல வழிகளில் வந்து சேரும். கொடுக்கல் - வாங்கலில் கூட சிறப்பான நிலை காணப்படும்.


பரிகாரம்: சனிக்கிழமை ஏழைமக்களுக்கு உணவு வழங்குவது சிறப்பான பலனை தரும். அனுமான் வழிபாடு செய்வது நல்லது.

துலாம்

இந்த மாதத்தில் பெண்களுக்கு பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலை நல்லமுறையில் அபிவிருத்தி செய்ய முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். மாத இறுதியில், அலைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்யவும். மாத பிற்பகுதியில் சற்று செலவுகள் அதிகம் காணப்பட்டாலும் கூட பணவரவும் ஓரளவு திருப்தி தரும். சிலர், திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். எனினும், எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் மகிழ்ச்சி தரும். பெரும்பாலும் இந்த மாதத்தில் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள். அதிலும், உற்றார்- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.


பரிகாரம்: புதன்கிழமை விஷ்ணுவை வழிபடுவது பணி மற்றும் நிதியில் நல்ல பலன்களை தரும்.

விருச்சிகம்

இந்த மாதத்தில் சிலருக்கு ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் வந்து போகலாம். வெளி இடங்களில் சாப்பிடும் சமயத்தில் குறிப்பாக உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. மருத்துவர் அறிவுரை இன்றி நீங்களாக மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். மாத பிற்பகுதியில் சில அனுகூலமான பலன்கள் ஏற்படும். இதனால் எதையும் நீங்கள் எதிர்கொண்டு ஏற்றம் பெறுவீர்கள். அலைச்சல் இருந்தாலும், இறுதியில் முயற்சிகள் அனுகூலத்தை தரும். சுப காரியங்கள் கூட வீட்டில் நடந்தேறும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்குகள் படிப்படியாகக் குறைந்து ஏற்றம் ஏற்படும். இப்படியாக இந்த மாதத்தில் முற்பகுதி சோதனைகளைத் தந்தாலும் கூட பிற்பகுதியில் அனுகூலமான பலன்கள் எல்லாம் ஏற்படும். மாத பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். சிலருக்கு உஷ்ண சம்மந்தமான பிரச்சனைகள் கூட ஏற்பட இடம் உண்டு. அலைச்சல் அதிகம் இருக்கும். அதனால் திட்டமிட்டுச் செயல்களை செய்யுங்கள். அதே சமயத்தில், இறுதியில் உங்களது முயற்சி வீண் போகாது. அதனால் கவலை வேண்டாம். சிலர் கொடுத்த வாக்கை போராடிக் காக்க வேண்டி இருக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் சென்று வரவும்.


பரிகாரம்: சனிக்கிழமை அனுமான் வழிபாடு செய்ய வேண்டும். ஏழைமக்களுக்கு உணவு வழங்குவது சிறந்த பலனை தரும்.

தனுசு

உத்யோகத்தில் சிலருக்குத் திடீர் பொறுப்புகள் தரப்படலாம். இதனால் வேலை பளு அதிகரிக்க இடம் உண்டு. முடிந்த வரையில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனத்தை செலுத்துங்கள். மொத்தத்தில், அனைத்து விதங்களிலும் பொறுமையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. குல தெய்வ வழிபாடு நன்மை தரும். மாத பிற்பகுதியில், செலவுகள் அதிகம் காணப்படும். எனினும், பணவரவு போதுமானதாக இருக்கும். அதனால், உங்களது தேவைகள் இறுதியில் நல்லபடியாக நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். பணம் கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் அதிக கவனமுடன் சென்று வாருங்கள். அதிலும், மாத முற்பகுதியில் சில நன்மைகள் ஏற்பட்டாலும் கூட பிற்பகுதியில் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையில் அதிக ஏற்ற - இறக்கமான சம்பவங்கள் எல்லாம் நடந்தேறும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் கூட ஏற்பட இடம் உண்டு. அதனால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லுங்கள். எல்லாம் இருந்தும் கூட அனுபவிக்க முடிய வில்லையே என்ற ஏக்கம் சிலருக்கு இருக்கும். உற்றார் - உறவினர்கள் வழியில் கூட அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. தொழில் - வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும்.


பரிகாரம்: சந்திர பகவானை வழிபடுவது மன அமைதியை தரும். ஒவ்வொரு திங்கள்கிழமையும் கடல் நீரில் விளக்கேற்றி வேண்டுதல் செய்வது பலனை தரும்.

மகரம்

இந்த மாதத்தில் தாயாரின் உடல் நிலை மீது மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடி பெரும்பாலும் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்கள் இடையே மட்டும் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். குரு பலம் இந்தக் கால கட்டத்தில் உங்களுக்கு இருப்பதால், உங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும்பாலான பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். உங்களது முயற்சிகளுக்கு உரிய நல்ல பலன் உங்களுக்குக் கிடைக்காமல் போகாது. பொருளாதார நிலையில் மேன்மை உண்டாகும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து பேதங்கள் கூட குறையும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கூட கிடைக்கப்பெறும். பல்வேறு பொது நலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மட்டும் கூட்டாளிகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பாருங்கள். இந்தக் கால கட்டத்தில் புத்திர வழியில் மட்டும் சிறு, சிறு கவலைகள் சிலருக்கு ஏற்பட்டு விலகும். எனினும், பெரிய கெடுதல்களுக்கு வாய்ப்பு இல்லை. உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் இது வரையில் இருந்து வந்த மந்த நிலை விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றி உண்டு. கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்கள் கூட ஓரளவு லாபத்தை தரும். எதிரிகளின் பலம் குறைந்து... உங்களது பலம் கூடும். சிலருக்கு அரசு உதவிகள் கூட ஆதாயம் தரும். பெரிய மனிதர்களின் நட்பு சிலருக்குக் கிடைக்கப்பெறும். அதனால், எதிர்காலத்தில் பல நல்ல பலன்கள் ஏற்படும். சிலருக்குக் கொடுத்த கடன் வசூலாகும். புதிய வீடு, மனை வாங்கக் கூடிய பாக்கியம் சிலருக்குக் கிடைக்கப்பெறும். மாணவர்கள் இனி வரும் காலங்களில் பாடங்களை புரிந்து படிப்பார்கள். பெண்கள் ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். இப்படியாக அனைத்து விதங்களிலும் நல்ல பலன்கள் தான் உங்களுக்கு ஏற்படும்.

பரிகாரம்: குரு பகவான் அருளை பெற, தட்சிணாமூர்த்தி வழிபாடு முக்கியம். தியாகராஜர் பாடல்களை பாடுவது சிறந்த பரிகாரமாகும்.


கும்பம்

இந்த மாதத்தில் உணவு விஷயத்தில் கூடுதல் கட்டுப்பாடு தேவை. சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சிலருக்கு வீடு, மனை வாங்கும் பாக்கியம் ஏற்படலாம். அதன் காரணமாக கையிருப்பு குறையலாம். சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக புதிய கடன்கள் கூட ஏற்படலாம். முடிந்த வரையில் பணத்தை சிக்கனமாக செலவழிக்கப் பாருங்கள். பொருளாதாரம் கொஞ்சம் ஏற்ற - இறக்கமாகத் தான் இருக்கும். எனினும், உங்களது தேவைகள் இறுதியில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் எதிர்ப்புகள் இருந்தாலும் கூட எதிர்நீச்சல் போட்டு வெற்றி அடைவீர்கள். பெரிய அளவில் முதலீடுகளை செய்யும் சமயத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. மொத்தத்தில் பொருளாதார நிலை ஓரளவே திருப்தி தரும். எனினும் வரவுக்கு மீறிய செலவு என்பது தவிர்க்க முடியாது தான். இருந்தாலும் மாத இறுதியில் குடும்பத்தில் அவ்வப்போது மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடந்தேறும். முடிந்தவரையில் நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லவும். சிலர் ஆடை, ஆபரணங்கள் மற்றும் நவீனப் பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் கூட சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் திறமைக்கு ஏற்ப பாராட்டு பிற்காலத்தில் கிடைக்கப்பெறும். அதனால் வேலை பளு அதிகரிக்கிறதே என்று கவலை கொள்ளாதீர்கள். பிள்ளைகளை மட்டும் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும்.


பரிகாரம்: பிரதோஷ தினத்தில் சிவன் வழிபாடு செய்வது நல்ல பலன்களை தரும். சூரிய பகவானை தினமும் காலை வழிபடுங்கள்.

மீனம்

இந்த மாதத்தில் கோபத்தைக் குறைத்துப் பேச்சில் அதிக நிதானத்தை கொண்டு வருவது நல்லது. வரவும், செலவும் சரி சமமாகவே இருந்து வரும். எனினும் உங்களது தேவைகளை நல்ல படியாக சந்திப்பீர்கள். அதனால் கவலை வேண்டாம். மனதில் அவ்வப்போது தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். குரு பலம் இருப்பதால் சோதனைகளைக் கடந்து இறுதியில் சாதனை படைப்பீர்கள். சிலர் இந்தக் காலத்தில் கடன்களின் ஒரு பகுதியை அடைப்பார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் எல்லாம் கூட நல்லபடியாக நடந்தேறும். உணவு விஷயத்தில் கூடுதல் கட்டுப்பாடு தேவை. காரணம், இந்த மாதத்தில் சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வந்து போக இடம் உண்டு. கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை தொடரும் தான். எனினும் அதனால் எதிர்காலத்தில் நன்மைகள் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும் சமயத்தில் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறு, சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் கூட இறுதியில் சோதனையை சாதனையாக மாற்றுவீர்கள். அசையும் - அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் சிலருக்கு ஏற்படலாம். தொழில் அல்லது வியாபாரத்தில், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். மாத பிற்பகுதியில், உத்யோகத்தில் இது நாள் வரையில் தடைபட்டுக் கொண்டு இருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற அனைத்தும் கூட இந்தக் காலத்தில் சிலருக்குக் கிடைக்கப்பெறும். மாத கிரகங்களின் சஞ்சாரம் ஏறக்குறைய இருந்தாலும், குரு பலம் இருப்பதால் இறுதியில் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கைகொடுக்கும். அதனால் கவலை வேண்டாம். ஆஞ்சநேயர் வழிபாடு இந்தக் காலத்தில் உங்களுக்கு நன்மையை செய்யும்.


பரிகாரம்: பிள்ளையார் வழிபாடு மிக முக்கியம். புதன் பகவானின் கருணையை பெற, விஷ்ணு ஆலயத்தில் துளசி மாலை அணிவிக்கலாம்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இன்றைய ராசிபலன் - 02.04.2025.

இன்றைய ராசிபலன் - 1.4.2025

Copied!