
மேஷம்
"இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசால் ஆதாயம் உண்டாகும் சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் கூட உண்டாகலாம்.",
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யவும்.
ரிஷபம்
"வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை யின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங் களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர் கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.",
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்யவும்.
மிதுனம்
"இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும்.",
பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணு சாஹஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.
கடகம்
"தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.",
பரிகாரம்: சனிக்கிழமை விஷ்ணு அல்லது ஹனுமான் வழிபாடு செய்யவும்.
சிம்மம்
"புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.",
பரிகாரம்: ஏழை மக்களுக்கு உதவி செய்யலாம்.
கன்னி
"மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதியும் மனதில் சோர்வும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும்.",
பரிகாரம்: வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு செய்யவும்.
துலாம்
இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
பரிகாரம்: தசமி விரதம் மேற்கொள்வது சிறப்பு.
விருச்சிகம்
புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவி னர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்கு வீட்டுக்கு வந்த பிறகும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை லட்சுமி தேவி வழிபாடு செய்யவும்.
தனுசு
"இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.",
பரிகாரம்: புதன்கிழமை விநாயகர் வழிபாடு சிறந்தது.
மகரம்
மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணி களிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் - மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாடு செய்யவும்.
கும்பம்
எந்த விஷயத்திலும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்புக் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்.
மீனம்
தேவையான பணம் கையில் இருந்தாலும், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி, துளசிப் பூஜை செய்யவும்.
உங்கள் கருத்தை பதிவிடுக