Nigazhvu News
16 Apr 2025 5:36 AM IST

இன்றைய ராசிபலன் - 15.04.2025

Copied!
Nigazhvu News

மேஷம்

எந்த விஷயத்திலும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள்உறவினர்கள், நண்பர்கள்  உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்புக் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


பரிகாரம்:

ராமர் மற்றும் அனுமன் வழிபாடு நல்ல பலன் தரும்.

 

ரிஷபம்:

இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.


பரிகாரம்:

வெள்ளி நகைகளை அணிவது சகல நன்மைகளையும் கொடுக்கும்.


மிதுனம் :

        "இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து சிலருக்கு கவலை உண்டாகலாம்.",


பரிகாரம்:

புதன் பகவானுக்கு கற்பூர ஆராதனை செய்யவும்.


கடகம் :

இன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்டநாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மொத்தத்தில் சோதனைகளை கடந்தே இன்றைய தினத்தில் நீங்கள் சாதனை படைப்பீர்கள்.


பரிகாரம்:

திங்கட்கிழமைகளில் அம்மன் கோவிலில் பால் அபிஷேகம் செய்யவும்.

 

சிம்மம் :

இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.


பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்.

 

கன்னி :

இன்று குடும்பத்தில் கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத் துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது.


பரிகாரம்:

பசுவுக்கு உணவு அளிப்பது நன்மை தரும்.

 

துலாம்:

"இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. பழுதான வண்டியை மாற்றுவீர்கள் வீடு மாற்றுவது தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். வீடு மனை வாங்க சிலருக்கு லோன் கிடைக்கும்.",


பரிகாரம்:

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்யவும்.


விருச்சிகம்:

"இன்று குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்டநாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மொத்தத்தில் சோதனைகளை கடந்தே இன்றைய தினத்தில் நீங்கள் சாதனை படைப்பீர்கள்.",


பரிகாரம்:

சிவன் கோவிலில் பூஜை செய்து, ருத்திராபிஷேகம் செய்யவும்.


தனுசு:

இன்று நீண்டதூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


பரிகாரம்:

தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்ல பலன் தரும்.


மகரம் :

        "புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக் கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.",


பரிகாரம்:

சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்.

 

கும்பம்:

        "பல வகைகளிலும் அனுகூலமான நாள். முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் ஆலோசனை செய்வது நல்லது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.",


பரிகாரம்:

ஆஞ்சநேயரை வணங்கி, துளசிப் பூஜை செய்யவும்.

 

மீனம்:

இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டில் உள்ள பொருட் களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எதிர்பார்த்த தொகை கைக்கு வரும் புது பதவி, சொத்து வழக்கில் வெற்றி கிடைக்கும் வீண் கவலைகள் வந்து போகும்.


பரிகாரம்:

சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யவும்.

 

 

 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இன்றைய ராசிபலன் - 14.04.2025

Copied!