Nigazhvu News
04 Apr 2025 9:42 PM IST

நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சாய்பல்லவி நடிப்பில் உருவாகும் ஷியாம் சிங்கா ராய் படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது.

Copied!
Nigazhvu News

நேச்சுரல் ஸ்டார் நானி  மற்றும் சாய்பல்லவி நடிப்பில் உருவாகும் ஷியாம் சிங்கா ராய் படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது. 

ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி  மற்றும் சாய்பல்லவி மற்றும் பலர் நடித்த ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்தின் டீசரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படக்குழுவினர் இன்று வெளியிட்டு உள்ளனர்.

வரலாற்று நிகழ்வையும், நிகழ்கால கதையையும் இணைத்து ஷியாம் சிங்கா ராய் உருவாகி உள்ளதாக அதன் டீசரில் தெரிகிறது. முறுக்கிய மீசையுடன் நானியும், துர்கா தேவியின் வேடத்தில் நடனமாடும் சாய் பல்லவியின் தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சங்க்ரித்யன் இயக்கத்தில் நிஹாரிகா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ஷியாம் சிங்கா ராய் படத்தில் ராகுல்  நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்டின், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மிக்கி ஜே.மேயர் இசையமைக்கும் இப்படத்திற்கு சானு ஜான் வர்க்கிஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் டிசம்பர் 24ல் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 


இதற்கு முன்பு நானி நடிப்பில் வெளியான 'வி' மற்றும் 'டக் ஜெகதீஷ்' ஆகிய படங்கள் நேரடியாக  ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நானியின் திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி உள்ளது. 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பிரபுதேவா, ரெஜினா கசாண்ட்ரா, அனசுயா பரத்வாஜ் நடித்த வசீகரமான ஃப்ளாஷ்பேக் பர்ஸ்ட்லுக் வெளியானது.

கன்னட சினிமாவின் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் திடீர் : இரசிகர்கள் திரையுலகினர் அதிர்ச்சி

Copied!