Nigazhvu News
04 Apr 2025 9:28 PM IST

"பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

Copied!
Nigazhvu News

"பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை, அதன் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். அதனை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

காலஞ்சென்ற கல்கி  அவர்கள் எழுதிய காலத்தால் அழியாத காவியம் பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர் தொடங்கி பலரும் அதைத் திரையில் கொண்டு வர முயற்சித்தாலும், இயக்குனர் மணிரத்னம் அவர்களால் மட்டுமே அந்த முயற்சியில் வெற்றி பெற முடிந்தது.

கார்த்தி, விக்ரம், ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, சரத்குமார் என பல்வேறு உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ரகுமான் இசையமைத்து வருகிறார். இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தின் படபிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் என பல இடங்களில் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ், பிண்ணனி இசை போன்ற அதன் தயாரிப்பு பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

தனது குழுவினருடன்  பின்னணி இசைக்கோர்ப்பு பணியில் ஈடுபட்டு வரும் ரகுமான், அது தொடர்பான வீடியோ ஒன்றை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


" PS PS PS briefing from the master #manirathnam #ponniyinselvan " என்ற தலைப்பில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், இயக்குனர் மணிரத்னம்  காட்சியைப் பற்றி இசைக்கலைஞர்களுக்கு விளக்குகிறார். அதை ரகுமான், ட்ரம்ஸ் சிவமணி போன்றவர்கள் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பின்னணி இசைக்கோர்ப்பு  தொடர்பான அந்த வீடியோவை, இரசிகர்கள் மகிழ்வுடன் பகிர்ந்து வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சபாஷ் மித்து : இந்தியக் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Copied!