Nigazhvu News
20 May 2025 10:50 AM IST

83 படத்தின் டிரைலர் வெளியீடு - கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்

Copied!
Nigazhvu News

83 படத்தின் டிரைலர் வெளியீடு - கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம் 

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 83 படத்தின் டிரைவர் வெளியாகி உள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இன்று உலகக் கிரிக்கெட்டில் கோலோச்சியிருக்கும் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ஆம் ஆண்டு கோப்பையை வென்ற தருணம்தான். அதன்பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் பட்டிதொட்டியெங்கும் பரவியது.  ஆனால் அந்த கோப்பையை வெல்வதற்கு முன் இந்திய அணி  உலகக்கோப்பையில் சந்தித்த அவமானங்களையும் புறக்கணிப்புகளையும்  தாண்டி, எப்படி மீண்டு வந்து கோப்பையை வென்றது என்பதை மையப்படுத்தி  திரைப்படமாக எடுக்க முயற்சி எடுக்கப்பட்டது.

இயக்குனர் கபீர்கான் எடுத்த அந்த முயற்சியில் ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோன், ஜீவா நடிப்பில்  83 என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. கபில்தேவாக ரன்பீர் கபூர், ஸ்ரீகாந்தாக ஜீவா,  சுனில் கவாஸ்கராக தஹிர் பாசின், ரவி சாஸ்திரியாக தைரியா கர்வா என அச்சு அசலாக அப்படியே நடித்துள்ளார்கள். நேற்று வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கேரக்டர் தேர்வும், அதில் விளையாடிய வீரர்களின் தோற்றத்தையும் உடல்மொழியையும் அப்படியே பிரதிபலிப்பது போன்று  திரையில் காட்டி இருப்பதால், படக்குழு  அந்த பசுமையான நினைவுகளை மீட்டெடுத்து மீண்டும் இரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது  வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக ஸ்ரீகாந்த் தோன்றும் காட்சிகள் நகைச்சுவையாக ரசிக்கும்படி இருக்கிறது.  கோப்பையை வென்ற பிறகு சிறு வயது சச்சினை காட்டியிருப்பது ரசிகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.டிசம்பர் 24ல் இப்படம் திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சபாஷ் மித்து : இந்தியக் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபுதேவா, ரெஜினா கசாண்ட்ரா, அனசுயா பரத்வாஜ் நடித்த வசீகரமான ஃப்ளாஷ்பேக் பர்ஸ்ட்லுக் வெளியானது.

Copied!