30 ஆண்டுகள் இல்லாத வகையில் பெய்த கனமழையில் திருமலையில் சுவர்கள் இடிந்து வழித்தடங்கள்சேதம் : 4 கோடி வரை இழப்பு என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
ஆந்திராவில் பெய்த கனமழையால் திருமலையில் பல்வேறு இடங்களில் சுவர்கள் இடிந்து வழித்தடங்கள் சேதமடைந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மழை சேதத்தால் ரூ4 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக பருவமழை பெய்து வருகிறுது. பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ள திருமலைப் பகுதியில் கடந்த 3 தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.
கடத்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத கனமழையில் திருப்பதி திருமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. மேலும் கோவிலின் சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது.மலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஸ்வரர் சுவாமி கோவில் முகமண்டபம் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது.
கனமழை உண்டாக்கிய சேதம் சுமார் 4 கோடி வரை இருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. விரைவில் சேதங்கள் சரிசெய்யப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக