தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 9 நவதிருப்பதி தலங்களில் ஒன்பதாவது ஸ்தலமாக விளங்குகிறது ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பவித்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் பவித்ரோத்ஸவ நிகழ்ச்சியை முன்னிட்டு மாலை 5 மணிக்கு சாயரட்சை நடந்தது. அதைத் தொடர்ந்து 5.30மணிக்கு ஹோமம் நடந்தது. 6.30 மணிக்கு வாகன குறட்டற்கு சுவாமிகள் பொலிந்து நின்ற பிரான் மற்றும் நம்மாழ்வார் எழுந்தருளினர்.
7.30 மணிக்கு பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அதைத் தொடர்ந்து மாட வீதி புறப்பாடு நடந்தது. இதில் முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனமும் ஹம்ஸ வாகனமும் வீதி உலா வந்தது.
இந்நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர், திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக