Nigazhvu News
23 Nov 2024 4:12 AM IST

Breaking News

விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற "சந்தனக்கூடு திருவிழா" கொடியேற்றம்!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த "மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹா மற்றும் பள்ளிவாசலில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் "சந்தனக்கூடு திருவிழாவானது"  மதவேறுபாடின்றி அனைத்து தரப்பு மதத்தினராலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.


அதன்படி, ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் முன்னிலையில் இந்தாண்டிற்கான "சந்தனக்கூடு" திருவிழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று(04.09.2024) மாலை 5 மணி அளவில் தர்காவில் இருந்து புறப்பட்ட இஸ்லாமியர்கள் பட்டாசுகள் வெடித்து, ராஜமேளத்துடன் வெண்கொடி ஏந்தி வைப்பார் கிராமம் முழுவதும் தீன்கொடி தொடர் நகர்வலம் சென்றனர். பின்னர் தர்காவை வந்தடைந்த வெண்கொடியை கொடிமரத்தில் ஏற்றப்பட்டு வெகு விமர்சையாக "சந்தனக்கூடு கொடியேற்றம் நிகழ்ச்சி" சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து மத வேறுபாடின்றி தர்காவிற்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 


மேலும் வருகின்ற 17.09.2024 செவ்வாய்க்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் சந்தனகூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து திருவிழாவின் இறுதியாக வருகின்ற 23.09.2024 திங்கள்கிழமையன்று கொடியிறக்கம் நிகழ்வுடன் சந்தனக்கூடு திருவிழா முடிவடைகிறது.





உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா

சூரங்குடி அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற சப்பரத் தேர் பவனி!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

சிதம்பராபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விஜயநேத்ரன்

மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் ஆருத்ரா தரிசனம்

விஜயநேத்ரன்

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும்

விஜயநேத்ரன்

திருக்கார்த்திகை: மூன்று வகையான கார்த்திகை தீபங்களும், வரலாறும்

மித்ரன்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : தடுப்பூசி சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கே அனுமதி