சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பராபுரம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடை விழா திங்கள்கிழமை தொடங்கியது.
முதல் நாள் வருஷாபிஷேகம், அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இரவு கோயில் நிர்வாகம் சார்பில் 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையை சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் பால்பாண்டி தொடங்கி வைத்தார். இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி , அம்பாளை வழிப்பட்டனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பால்பாண்டி பட்டு புடவை பரிசாக வழங்கினார். தொடர்ந்து கோயிலில் அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 2ம்நாள் கோயிலில் காலை பூஜை, அலங்கார தீபாராதனை, முளைப்பாரி எடுத்து வருதல், சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக