Nigazhvu News
23 Nov 2024 8:40 AM IST

Breaking News

கோவில்பட்டி பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Copied!
Nigazhvu News

கோவில்பட்டி இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் கோயில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்  


துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்து சமய அறநிலைத்துறை உட்பட்ட பூவன நாதசுவாமி திருக்கோயில் உடன் இணைந்த அருள்மிகு பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா  நேற்று முன்தினம் 4 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று விஷ்வக்ஸேனர், ஆராதனம், புண்யாஹ வாசனம், கோ பூஜை, விஸ்வரூபம், த்வார பூஜை, பாலிகா பூஜை, கலச ஆராதனம் மற்றும் 4ம் கால ஹோம பூஜைகளும் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகள்  விமான கோபுரங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, நகர் மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

சிதம்பராபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Copied!
இராதேயன்

சிதம்பராபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விஜயநேத்ரன்

மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் ஆருத்ரா தரிசனம்

விஜயநேத்ரன்

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும்

விஜயநேத்ரன்

திருக்கார்த்திகை: மூன்று வகையான கார்த்திகை தீபங்களும், வரலாறும்

மித்ரன்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : தடுப்பூசி சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கே அனுமதி