
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவிலில் பாரம்பரியமாக வாக்கிய பஞ்சாங்கம் முறையைப் பின்பற்றியே சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்படும். சமீபத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்பு அடிப்படையில் 2025 மார்ச் 29-ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு நகர்வதாக தகவல் வெளியானது.
திருக்கணிதப் பஞ்சாங்க கணிப்பின்படி, சனி பகவான் மீன ராசியில் 2025-ம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி நுழைந்து, 2027-ம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி வரை அதில் இருக்கும் என கூறப்படுகிறது. சனி பகவான் மீன ராசியில் நுழைந்ததும், தனது மூன்றாம் பார்வையில் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையில் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையில் தனுசு ராசியையும் பார்ப்பார். இந்த நிலையை அடிப்படையாகக் கொண்டு பல ஜோதிடர்கள் பலன்களை கணித்து அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருநள்ளாறு கோவில் நிர்வாகம் இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கியுள்ளது. திருநள்ளாறு கோவிலில் வாக்கிய பஞ்சாங்க முறையின்படியே 2026-ம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே 2025 மார்ச் 29-ஆம் தேதி திருநள்ளாறு கோவிலில் எந்தவிதமான சனிப்பெயர்ச்சி விழாவும் நடைபெறாது என்பதை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக