தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற சப்பர தேர்வானியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனமுருகி தரிசனம் செய்து சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சப்பரத் தேர் பவனி திருவிழாவானது, கரகாட்டம்: வானவேடிக்கையுடன், நையாண்டி மேளம் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அம்மனின் சப்பர தேர் பவனியை முன்னிட்டு பெத்தனாட்சி அம்மனுக்கு பல வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கத்தினால் நன்கு அலங்கரிக்கப்பட்டு, பின் அலங்கார தீபாரதனை கட்டப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் எழுந்தருளிய சப்பரத் தேரின் வடத்தினை பிடித்து இழுக்க அம்மனின் சப்பர தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது. இதில் வழி நெடுகிலும் பொதுமக்கள் பூ, பழம், தேங்காய், எலுமிச்சை மாலை உள்ளிட்டவற்றை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக