தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே நேற்று அதிகாலை கரையை கடந்தது. ஆனாலும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
கடந்த 13ம் தேதி வங்கக்கடலின் அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வழுவடைந்தது. அது நேற்று அதிகாலையில் சென்னைக்கும் புதுவைக்குமிடயே கரையைக் கடந்தது.
புயல் கரையை கடந்தாலும், ஆந்திரா மற்றும் தமிழகப் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் வரும் 23ம் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனால் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரி மற்றும் பிற இடங்களில் மிதமான மழை பெய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக