அடுத்த மூன்று மணிநேரத்தில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது
வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதனால் கன்னியாகுமரி உட்பட 5 தென்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது.
தற்போது , அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை பாதிப்பில் இருந்து மீண்ட சென்னைக்கு இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர்,பெரம்பலூர், கன்னியாகுமரி, தென்காசி, மயிலாடுதுறை, அரியலூர்,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்து இருக்கிறது.
கோவை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாகை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக