Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட்டா??: வங்கக்கடலின் அந்தமான் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

Copied!
Nigazhvu News

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட்டா??: வங்கக்கடலின் அந்தமான் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

 வங்கக்கடலில்  உள்ள  தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நவம்பர் 9ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில்   உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டது. அது காற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் தமிழகமெங்கும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் சென்னைக்கு அருகே கரையைக் கடந்தது.  இதனால் சென்னையில் விடிய விடிய கொட்டிக் தீர்த்த கனமழையால், ஊரே வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது.

புயல் கரையைக் கடந்ததால்,  சென்னை உட்பட தமிழ்நாட்டில் வெயில் முகம் காட்டியது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களை அச்சுறுத்தும் செய்தி ஒன்றை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. 

வங்கக்கடலில் உள்ள தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (சனிக்கிழமை) உருவாகும் என்ற வானிலை மையத்தின் செய்தி மக்கள் மத்தியில் மீண்டும் வெள்ளம் தொடர்பான அச்சத்தை உண்டாக்கி உள்ளது. 

வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் " இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அங்கிருந்து நகர்ந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது " என்று  கூறப்பட்டுள்ளது. 

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக,  தமிழகத்தில் இன்று முதல் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும்பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கனமழைப்பகுதிகள்: 

இடியுடன் கூடிய கனமழை பெய்யும் பகுதிகளாக திண்டுக்கல், தேனி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை,  கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,  நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தின் மற்ற  பகுதியிலும், புதுச்சேரியிலும் பெருவாரியான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்  என்று அறிவித்துள்ளது.‌

நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி,  காஞ்சீபுரம், கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுச்சேரி, கடலூர் மற்றும் ஏனைய உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு' - முதல்வர் ஸ்டாலின்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

Copied!
மித்ரன்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு' - முதல்வர் ஸ்டாலின்

மித்ரன்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

மித்ரன்

கொரோனாவின் கோரதாண்டவத்தை புகைப்படம் எடுத்து உலகறிய செய்த தானிஷ் சித்திக் ஆப்கானில் படுகொலை

மித்ரன்

பா.ஜ.க அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ. 3000 கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு

மித்ரன்

அரசியல் வாழ்க்கைக்கு கதம் கதம் : அறிவித்தார் ரஜினிகாந்த்