Nigazhvu News
17 Mar 2026 3:23 AM IST

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

Copied!
Nigazhvu News

தமிழகத்தில் +2 பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். ஜுலை 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதத்தில் நடைபெற இருந்த +2 பொதுத்தேர்வுகள், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக இரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழக அரசு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்தது. ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் நிறைவுற்றதால், இன்று காலை 11 மணிக்கு தேர்வு முடிவுதளை வெளியிடுகிறது. 

www.tnresults.nic.in 

www.dge1.tn.nic.in 

www.dge2.tn.nic.in 

www.dge.tn.gov.in

மேற்கண்ட இணையதளங்களில்  தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்க்கலாம்..

மாணவர்கள் அளித்த உறுதிப்படிவத்தில் இருக்கும் தொலைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மதிப்பெண் வழங்கும் முறை: 

பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதமும் 11 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 சதவீதமும் கணக்கிடப்பட்டு, அதனுடன்  12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்களில் 30 சதவீதம் சேர்த்து மொத்த மதிப்பெண்கள் வழங்கப்படும்.

11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 35 மதிப்பெண்கள் வழங்கபடும்‌. அந்தத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். 

12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு 20 மதிப்பெண்களும், அக மதிப்பீடு 10 மதிப்பெண்களும் சேர்த்து 30 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட்டா??: வங்கக்கடலின் அந்தமான் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

கொரோனாவின் கோரதாண்டவத்தை புகைப்படம் எடுத்து உலகறிய செய்த தானிஷ் சித்திக் ஆப்கானில் படுகொலை

Copied!
மித்ரன்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு' - முதல்வர் ஸ்டாலின்

மித்ரன்

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட்டா??: வங்கக்கடலின் அந்தமான் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

மித்ரன்

கொரோனாவின் கோரதாண்டவத்தை புகைப்படம் எடுத்து உலகறிய செய்த தானிஷ் சித்திக் ஆப்கானில் படுகொலை

மித்ரன்

பா.ஜ.க அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ. 3000 கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு

மித்ரன்

அரசியல் வாழ்க்கைக்கு கதம் கதம் : அறிவித்தார் ரஜினிகாந்த்