Nigazhvu News
28 Sep 2024 11:44 PM IST

Breaking News

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

Copied!
Nigazhvu News

மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்து ஹாயாக இருந்த லோடுமேன் - மூதாட்டி உயிர் பிழைத்து கொண்டதால் போலீசாரிடம் சிக்கி கொண்ட சம்பவம் – பரபரப்பு.


குடும்ப நண்பர் என்ற பெயரில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தாக்கிய லோடுமேனை கைது செய்து மரத்தடியில் பதுக்கி வைத்திருந்த 7 பவுன் நகையை மீட்ட போலீசார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரனசூர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரது மனைவி வாணி (56). இவர்களுக்கு சக்திவேல், சந்தானவேல் என்ற 2 மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. சக்திவேல் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். சந்தானவேல் ரனசூர்நாயக்கன்பட்டியிலே விவசாயம் செய்து வருகிறார். சக்திவேல், சந்தானவேல் குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் வாணி மட்டும் தனியாக இருந்துள்ளார். நேற்று முன் தினம் மாலை வீடு பூட்டி இருப்பதை கண்டு அருகில் இருந்தவர்கள் சந்தானவேலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையெடுத்து சந்தானவேல் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டி இருப்பதும், வீட்டிற்குள் இருந்து ஒரு முனகல் சத்தம் வருவதை கேட்டதும், கதவினை உடைத்து பார்த்த போது கழுத்தில் காயத்துடன் அவருடைய தாயார் வாணி மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையெடுத்து தனது தாயார் வாணியை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வாணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க செயின் காணமால் இருப்பது தெரியவந்தது. நேற்று காலை கண்விழித்த வாணி, தன்னுடைய மகன் சந்தானவேலிடம் பேசியுள்ளார். தனது வீட்டின் அருகில் இருக்கும் சுடலைமுத்து தான் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி நகை பறித்து சென்றதாக கூறியுள்ளார். இதையெடுத்து எட்டயபுரம் காவல் நிலையத்தில் சந்தானவேல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் மூதாட்டி வாணியிடம் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் மூதாட்டி வாணியின் வீட்டு அருகே வசித்து வரும் பரமசிவம் என்பவரது மகன் சுடலைமுத்து, லோடுமேனாக பணியாற்றி வருகிறார். அருகில் உள்ள வீடு என்பதால் சுடலைமுத்து வாணி வீட்டில் உள்ள எல்லோருடன் சகஜமாக பழகுவது மட்டுமின்றி, அடிக்கடி வீட்டுக்கு வருவதும் வழக்கம் என்று தெரிகிறது. நேற்று அது போல வாணி வீட்டில் இருந்த வீட்டிற்கு வந்த சுடலைமுத்து சிறிது பேசிகொண்டு இருந்துள்ளார். கழுத்தில் சுடலை முத்து கயிறு ஒன்று போட்டு இருந்தாக தெரிகிறது அது பற்றி வாணி கேட்டதற்கு தான் காட்டிற்கு பேவதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு டீ வேண்டும் என்று சுடலைமுத்து கேட்க, மூதாட்டி வாணியும் டீ போட்டு கொடுத்துள்ளார். டீயை குடித்த அடுத்த நொடியே சுடலைமுத்து மூதாட்டி வாணியை தாக்கியது மட்டுமின்றி, தான் கொண்டு வந்த கயிற்றை வாணி கழுத்தில் போட்டு இறுக்கியுள்ளார். இதில் வாணி மயக்கமடைந்தும், அவர் இறந்து விட்டார் நினைத்து அவருடைய கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை எடுத்து கொண்டு கதவினை வெளிப்புறமாக பூட்டி விட்டு காட்டிற்கு சென்றது தெரியவந்தது.


அது மட்டுமின்றி வாணியை வீட்டிற்கு சென்று சுடலைமுத்து தாக்கி நகை பறிப்பதற்கு முன்பு சந்தானவேலுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் நலன் குறித்து நல்லவர் போல் கேட்டு விட்டு, வீட்டிற்கு எப்போது வருவார்கள் என்பது கேட்டு தெரிந்துகொண்டார். மேலும் சந்தானவேல் டிராக்டர் பழுது ஏற்பட்டு நிற்பதால் தான் இன்று சும்மாதான் இருப்பதாகவும், சரி பார்க்கவா? என்று சந்தானவேலிடம், சுடலை முத்து கேட்டுள்ளார். தான் இன்றைக்கு வர வாய்ப்பு இல்லை, நாளைக்கு வந்த பின்னர் பார்த்து கொள்வதாக கூறியுள்ளார். வீட்டில் வாணி தானியாக இருக்கிறார். யாரும் வர மாட்டார்கள், வாணியை கொலை செய்து விட்டு நகை திருடி விடலாம் என்று திட்டம் தீட்டி தான் திருட்டு சம்பவத்தினை அரங்கேற்றியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் பிழைத்து கொண்டதால் சுடலை முத்து மாட்டிக்கொண்டார். மேலும் வாணியிடம் இருந்து நகையை பறித்து விட்டு, வெளியே சென்ற சுடலைமுத்து, சிறிது நேரம் கழித்து சந்தானவேலுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வீடு பூட்டி இருக்கு, அம்மாவும் மருத்துவனைக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த எட்டயபுரம் போலீசார் சுடலைமுத்துவினை கைது செய்து, அக்கிராமத்தில் மரத்திற்கு அடியில் பதுக்கி வைத்து இருந்த 7 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். போலீசார் சுடலைமுத்துவிடம் விசாரித்தில் கடன் அதிகமான காரணத்தினால் நகையை பறித்தாக கூறியுள்ளார். இதையெடுத்து போலீசார் சுடலைமுத்துவை சிறையில் அடைத்தனர்.


நல்லவர் போல குடும்பத்துடன் பழகி, மூதாட்டி கழுத்தை நெரித்து 7 பவுன் தங்க நகையை லோடுமேன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!

இராதேயன்

விளாத்திகுளம் அருகே செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.