உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்ட வட்டாச்சியர்.
வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரியை சால்வை அணிவித்து வரவேற்ற கிராம மக்கள்....
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கல்குறிச்சி கிராமம் உள்ளது. இதில் ஆதி திராவிடர் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் 30 வீடுகள் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடுகளில் தற்போது வரை இந்த பகுதி மக்கள் குடியிருந்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு இருந்த இடத்தில் 10 குடும்பங்கள் மட்டுமே அங்கே வசித்து வருகின்றனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாததாலும் பல ஆண்டுகாலமாக பட்டாவுக்காக போராடி வழங்காத காரணத்தால் சில குடும்பத்தினர் அங்கிருந்து வெளியே சென்றுள்ளனர்.
ஆனால் இதுவரை அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கவில்லை. தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதி பொதுமக்கள் சாத்தான்குளம் வட்டாச்சியர் இசக்கி முருகேஸ்வரியை நேரில் சந்தித்த இந்த பகுதி பொதுமக்கள் தங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டாச்சியர் சில தினங்களில் தான் நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதற்கிடையில் இன்று கல்குறிச்சி பகுதிக்கு சாத்தான்குளம் வட்டாச்சியர் இசக்கி முருகேஸ்வரி நேரில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார். அவர் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களிடம் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையில் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் மீண்டும் வட்டாச்சியரிடம் இலவச பட்டா கேட்டு மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாச்சியர் நிச்சயம் உடனடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் திசையன்விளை நகர செயலாளர் மக்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக