தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் கோவில்பட்டி தீயணைப்பு துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கையாக பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த செயல்முறை பயிற்சியை எட்டையபுரம் தாசில்தார் சங்கர நாராயணன் தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் மனோஜ் தலைமையில் தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மழைக்காலத்தின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது? ஏரி உடைப்பு ஏற்பட்டு மீட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தால் அங்குள்ள மக்களை எப்படி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது? ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கும் முறைகள்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இந்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேரூராட்சி, வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக