தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை துறையில் பணம் இல்லா பரிவர்த்தனை முறையில் மானியத்தில் விதைகள் மற்றும் உரங்கள் பெறுவது குறித்து ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவகாமி கூறுகையில் விதைகள் மற்றும் இடுபொருட்களை வாங்குவதற்கான வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு விவசாயிகள் வரும்பொழுது இடுபொருட்களுக்கான மானிய தொகை போக மீதி பங்குத் தொகையை ரொக்கமாக செலுத்தி வந்தனர் தற்போது விவசாயிகளின் பணப்பரிவர்த்தனை முறையை எளிதாக்கும் வகையில் தங்கள் வங்கி பரிவர்த்தனையில் உள்ள ஏடிஎம் கார்ட் கிரெடிட் கார்டு கூகுள் பே , போன் பே, பிஎச்ஐஎம் போன்ற செயலிகள் மூலம் தொகையை செலுத்தி பயனடையலாம் என வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
உங்கள் கருத்தை பதிவிடுக