ஓட்டப்பிடாரம் வட்டாரம் சிறுதானிய சாகுபடி செய்யும் விவசாயிகள் செயல் விளக்க திடல் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் 2024_25 ஆம் ஆண்டில் சிறு தானிய பயிர்களான சோளம் கம்பு மற்றும் குதிரைவாலி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது சோளம் மற்றும் கம்பு செயல் விளக்கத்திடல் அமைக்க ஒரு ஹெக்டர் ரூபாய் 6000 மானியத்தில் இடுபொருட்கள் உயர் விளைச்சல் ரக சோளம் மற்றும் கம்பு விதை விநியோகத்திற்கு ஒரு கிலோவிற்கு ரூபாய் 30 மானியம் சோளம் மற்றும் கம்பு விதை உற்பத்தியில் செய்ய ஊக்கத்தொகையாக ஒரு கிலோவிற்கு விதை மானியத்துடன் கூடுதலாக ரூபாய் 30 மானியம் வழங்கப்படும். மேலும் 300 உரங்கள் ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 500 மானியம் உயிர் உரங்கள் ஒரு எக்டருக்கு ரூபாய் 300 மானியம் வழங்கப்படும் பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு ஒரு எக்டருக்கு ரூபாய் 500 மானியம் சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம் ஒரு எக்டருக்கு ரூபாய் 2000 வழங்கப்பட உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவிடுக