Nigazhvu News
22 Nov 2024 10:25 PM IST

Breaking News

மாணவர்கள் நன்றாக படித்து வீட்டிற்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் ஓட்டப்பிடாரம் மெக்கவாய் மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ சண்முகையா அறிவுரை

Copied!
Nigazhvu News

தமிழ்நாடு அரசால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா ஓட்டப்பிடாரம் மெக்கவாய் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு 102 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் எம்எல்ஏ சண்முகையா பேசுகையில், மாணவச் செல்வங்கள் நீங்கள் நல்ல படிக்க வேண்டும். மேலும் நாம் என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு படிக்க வேண்டும். ஐஏஎஸ் ஐபிஎஸ் சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். அப்படி எண்ணத்தை உருவாக்கினால் நாம் வெற்றி பெறுவது உறுதி.

மாணவர்களாகிய நீங்கள் சைக்கிள் ஓட்டுவதால் ஆரோக்கியமாக இருக்கலாம் நோய் நொடி இல்லாமல் வாழலாம். மாணவ மாணவிகள் தாய் தந்தையர் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ்,மெக்கவாய் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வனஜா மங்கல செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ராதேவி சண்முகராஜ், கனகரத்தினம் சுகுமார், மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஜாண் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் 166 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சண்முகையா வழங்கினார்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!

இராதேயன்

விளாத்திகுளம் அருகே செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.