Nigazhvu News
23 Nov 2024 3:48 AM IST

Breaking News

வெங்கட் பிரபு நடத்திய சிம்புவின் மாநாடு எப்படி இருக்கு - சினிமா விமர்சனம்.

Copied!
Nigazhvu News

வெங்கட் பிரபு நடத்திய சிம்புவின் மாநாடு எப்படி இருக்கு - சினிமா விமர்சனம்.

படம் எப்போது வெளியாகும் என்ற பல்வேறு குழப்பங்களுக்கிடையே, ஒருவழியாக வெள்ளித்திரையில் அரங்கேறியிருக்கிறது சிம்புவின் மாநாடு.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு வெற்றிக்காக காத்திருந்த வெங்கட் பிரபுவும், சிம்புவும் இணைந்துள்ள மாநாட்டை  சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவனின் இசையமைப்பில் வெளியாகியுள்ள மாநாடு, தொண்டர்களை ஈர்த்ததா இல்லையா என்று பார்க்கலாம்.

கதைக்களம்

நண்பன் பிரேம்ஜியின் காதலைச் சேர்த்து வைக்க ஊட்டிக்கு வரும் சிம்பு சில பிரச்சனைகளால்  டைம் லூப் என்ற மாயவலையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டு, பிரச்சனைகளை எப்படி தீர்க்கிறார் என்பதே கதையின் களமாகும்.

அப்துல் மாலிக் கதாப்பாத்திரத்தில் அதகளம் செய்திருக்கும் சிம்பு, அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் கவர்ந்திருக்கிறார். ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என எல்லா ரசங்களையும் சரியான அளவில் கொடுத்து ஒரு பொறுப்பான நடிகராக திரையில் மிளிர்கிறார். சிம்புவையே மிஞ்சும் வகையில் ரணகளம் செய்திருக்கிறார் எஸ்.ஜே சூர்யா.  உடல்மொழியாலும், வசனங்களாலும் பின்னி பெடலெடுத்து தான் ஒரு மகா நடிகன் என்று நிரூபித்திருக்கும் இந்த கலைஞனைத் தாராளமாகப் பாராட்டலாம். 

எஸ்.ஏ.சி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா  மாநாட்டில் விஐபிக்கள் பலர் வலம் வந்தாலும், தனித்தன்மையுடன் தெரிவது மாநாட்டிற்கு பலம் சேர்த்கிறது.‌ கதாநாயகியாக வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷினிக்கு, பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும் வரும் காட்சியில் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.

இதில் பாராட்ட வேண்டியது, டைம்லூப் எனும் புதிய கதைக்களத்தை கமர்ஷியலாகவும், கச்சிதமாகவும் போராடிக்காமல் தனக்கே உரித்த பாணியில் திரைப்படுத்தியுள்ள இயக்குனர் வெங்கட் பிரபுவைத்தான்.

தனது ட்ரேட் மார்க் காமெடி ட்ரீட்மென்ட்டை படத்தில் தேவையான இடத்தில் சரியான அளவில் தந்து, மாநாட்டை வெற்றியாக்கி உள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலம் யுவன்சங்கர் ராஜாவின் இசைதான். ஹீரோவுக்கு ஒரு பி.ஜி.எம், நெகட்டிவ் கேரக்டருக்கு ஒரு பி.ஜி.எம் என தெறிக்கவிடும் யுவன், படம் முழுவதும் கெத்துக்காட்டி இருக்கிறார். 

அரசியல் சுயலாபத்திற்காக, பணயமாக்கப்படும் சிறுபான்மையினரின் நிலையை விளக்கியுள்ள விதம் அருமையாக இருக்கிறது. ஒரு சில லாஜிக் மீறல்களை தூரம் வைத்துவிட்டு மாநாட்டை  அனைவரும் ரசிக்கலாம். 

மொத்தத்தில்  வெங்கட் பிரபு இயக்கிய சிம்புவின் மாநாடு, மக்களின் பெரும் ஆதரவோடு வெற்றியைப் பெற்றிருக்கிறது. 



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இணையத்தில் வைரலாகும் தளபதி "விஜய்"யின் "பீஸ்ட் " புகைப்படம்

சிம்புவின் மாநாடு மீண்டும் தள்ளிவைப்பு - சுரேஷ் காமாட்சி அறிவிப்பு

Copied!
மித்ரன்

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் : சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #WeStandWithSuriya

மித்ரன்

"ஜெய்பீம்" படக்குழுவினர் மீது வழக்கு : பிரச்சனையை விஸ்வரூபமாக்கும் வன்னியர் சங்கம்

மித்ரன்

விஜய்சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மித்ரன்

சூர்யாவின் "ஜெய்பீம் " - மனமுருகிய முதல்வர் ஸ்டாலின்

மித்ரன்

நடிகர் திலகத்தின் பிறந்த நாளைக் கௌரவித்த கூகுள் டூடுல்