Nigazhvu News
12 Apr 2025 1:29 AM IST

நடிகர் திலகத்தின் பிறந்த நாளைக் கௌரவித்த கூகுள் டூடுல்

Copied!
Nigazhvu News

நடிகர் திலகத்தின் பிறந்த நாளைக் கௌரவித்த கூகுள் டூடுல் 

நடிகர் திலகம் செவாலியோ சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிவாஜி டூடுல் வெளியிட்டு கௌரவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் உலகின் தலைசிறந்த தலைவர்கள், கலைஞர்கள், அறிவியல் அறிஞர்களின் பிறந்தநாளுக்கு அவர்களை சிறப்பிக்கும் விதமாக,  டூடுள்  கார்ட்டூன்களை வெளியிட்டு வருகிறது. இது பலரையும் கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில், உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான நமது நடிகர் திலகத்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனைச் சிறப்பிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் சிவாஜியின் டூடுலை தனது முகப்பக்கத்தில்  வெளியிட்டுள்ளது. 

சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை வெளிப்படுத்தும் இந்த டூடுலை,பெங்களூரைச் சேர்ந்த ஓவிய கலைஞர் நூபூர் ராஜேஷ் சோக்ஸியால் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த டூடுலைக் கண்டவர்கள் அதனைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.



சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான நடிகர் விக்ரம் பிரபு இந்த டூடுலைப் பகிர்ந்து, கூகுளுக்கும் உருவாக்கிய கலைஞருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சூர்யாவின் "ஜெய்பீம் " - மனமுருகிய முதல்வர் ஸ்டாலின்

பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்? : இரகசியம் வெளியானது

Copied!
மித்ரன்

சிம்புவின் மாநாடு மீண்டும் தள்ளிவைப்பு - சுரேஷ் காமாட்சி அறிவிப்பு

மித்ரன்

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் : சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #WeStandWithSuriya

மித்ரன்

"ஜெய்பீம்" படக்குழுவினர் மீது வழக்கு : பிரச்சனையை விஸ்வரூபமாக்கும் வன்னியர் சங்கம்

மித்ரன்

விஜய்சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மித்ரன்

சூர்யாவின் "ஜெய்பீம் " - மனமுருகிய முதல்வர் ஸ்டாலின்