Nigazhvu News
19 Apr 2025 1:01 AM IST

பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்? : இரகசியம் வெளியானது

Copied!
Nigazhvu News

பொன்னியின் செல்வன்படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்? : இரகசியம் வெளியானது 

தமிழ் சினிமாவின் கனவும் படமான பொன்னியின் செல்வனில் நடிக்கும் நடிகர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களின் பெயர்கள் வெளியானது.

 மணிரத்னம் இயக்கி வரும்  ‘பொன்னியின் செல்வன்’  இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இதன் முதல் பாகம் அடுத்த ஆண்டு திரையில் வெளியாகும் என மணிரத்னம் தெரிவித்திருந்தார்.

பலமொழித் திரைப்படமாக வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன்  சுமார் 800 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. திரைப்படம் தொடங்கியதிலிருந்து அது பற்றிய செய்திகள் இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. 

படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விகடன் தளத்தில் வெளியான இச்செய்தி இன்று ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது. 

 ஏற்கனவே நாமறிந்தபடி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி,ஆழ்வார்கடியானாக ஜெயராம்  நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவியாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும் நடிக்கின்றனர்.

இவர்களைத் தவிர  சில மாற்றங்கள் புதிதாக வெளியாகி உள்ளன. அதில் முக்கியமானது அமிதாப் நடிப்பதாக இருந்த சுந்தர சோழர் பாத்திரத்தில் பிரகாஷ்ராஜும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்னப்பழுவேட்டரையராக பார்த்திபனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டு தோற்ற மாதிரியின் வரைபடங்கள் வெளியாகி உள்ளது. 


அனிருத்த பிரம்மராயராக பிரபுவும், கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவியும், மலையமானாக லாலும் நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. 

அதுபற்றிய உண்மைச் செய்திகளுக்காக பொன்னியின் செல்வன் இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்..


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

நடிகர் திலகத்தின் பிறந்த நாளைக் கௌரவித்த கூகுள் டூடுல்

சார்பட்டா பரம்பரை : திரைப்பிரபலங்களின் விமர்சனம்

Copied!
மித்ரன்

சிம்புவின் மாநாடு மீண்டும் தள்ளிவைப்பு - சுரேஷ் காமாட்சி அறிவிப்பு

மித்ரன்

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் : சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #WeStandWithSuriya

மித்ரன்

"ஜெய்பீம்" படக்குழுவினர் மீது வழக்கு : பிரச்சனையை விஸ்வரூபமாக்கும் வன்னியர் சங்கம்

மித்ரன்

விஜய்சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மித்ரன்

சூர்யாவின் "ஜெய்பீம் " - மனமுருகிய முதல்வர் ஸ்டாலின்