Nigazhvu News
12 Apr 2025 1:34 AM IST

"ஜெய்பீம்" படக்குழுவினர் மீது வழக்கு : பிரச்சனையை விஸ்வரூபமாக்கும் வன்னியர் சங்கம்

Copied!
Nigazhvu News

ஜெய்பீம் படக்குழுவினர் மீது வழக்கு : பிரச்சனையை விஸ்வரூபமாக்கும் வன்னியர் சங்கம்

ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சி தொடர்பாக சூர்யா உட்பட படக்குழுவினர் மீது  வன்னியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. 

சூர்யா நடிப்பில் அமேசான் தளத்தில் வெளிவந்த ஜெய் பீம் படம் பல்வேறு மொழிகளில் வரவேற்கத்தக்க விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் இருளர் இன மக்களின் நிலையையும் அவர்கள் படும் துன்பத்தையும் இயல்பாக வெளிக்காட்டினர்.

இந்நிலையில் அப்படத்தில் சில முக்கிய கதாபாத்திரங்கள் வன்னியர் இன மக்களை குறிப்பதாகவும் அதற்கு கண்டனம் தெரிவித்து அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.அதற்கு சூர்யாவும் பதில் அறிக்கை வெளியிட்ட நிலையில் அக்காட்சிகளும் மாற்றப்பட்டு வெளியாகியது.


ஆனால் அதை ஏற்று கொள்ளாத வன்னியர் சங்கம் அது வன்னியர்களை இழிவு படுத்துவது போல் அமைந்துள்ளதாகவும் அவர்களின் நன்மதிப்பிற்க்கு களங்கம் விளைவிப்பதாகவும்  காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர் .

எனவே அதற்கு ஈடாக படக்குழு சூர்யா,ஜோதிகா,இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் தங்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறும் நஷ்ட ஈடாக ரூபாய் 5 கோடியும் வழங்க வேண்டுமென்று வழக்கு  தொடர்ந்துள்ளனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் : சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #WeStandWithSuriya

விஜய்சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Copied!
மித்ரன்

சிம்புவின் மாநாடு மீண்டும் தள்ளிவைப்பு - சுரேஷ் காமாட்சி அறிவிப்பு

மித்ரன்

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் : சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #WeStandWithSuriya

மித்ரன்

விஜய்சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மித்ரன்

சூர்யாவின் "ஜெய்பீம் " - மனமுருகிய முதல்வர் ஸ்டாலின்

மித்ரன்

நடிகர் திலகத்தின் பிறந்த நாளைக் கௌரவித்த கூகுள் டூடுல்